நீரோ மன்னன் போல் செயல்படும் முதல்வர் - MK ஸ்டாலின் தாக்கு!
ரோம் பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல், நம் முதல்வர் பழனிசாமி செயல்பட்டு வருகின்றார் என திமுக தலைவர் தெரிவித்துள்ளார்!
ரோம் பற்றி எரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னன் போல், நம் முதல்வர் பழனிசாமி செயல்பட்டு வருகின்றார் என திமுக தலைவர் தெரிவித்துள்ளார்!
கஜா புயல் தாக்கத்தில் இருந்து தமிழகம் மீண்டு வர முயற்சித்து வரும் நிலையில், மீட்பு பணிகளை கூட பார்வையிடாமல் தனது சொந்த ஊரில் இசை கச்சேரிகளை பார்பதற்காக முதல்வர் சென்றுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது..
"ரோம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான்" என்பார்கள். அதுபோல தான் நம் ஊரிலும் முதல்வர் தற்போது செயல்பட்டு வருகின்றார். புயல் தாக்கி 72 மணி நேரம் கூட ஆகவில்லை, பாதிக்கப்பட்ட இடத்தினை பார்வையிடவில்லை. சுமார் 50 உயிர்களை புயல் பலி வாங்கியுள்ளது. பல்லாயிரம் மக்கள் வீட்டை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் சொந்த ஊரில் இசை கச்சேரி தேவை தானா?" என கேள்வி எழுப்பியுள்ளார்!