குடிநீர் பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து திருச்சி செய்தியாளர்களிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவிக்கையில்., "குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, அண்டை மாநிலங்களில் இருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த வி‌ஷயத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உதவ தயாராக இருக்கிறார். ஆனால் தமிழக அரசு வறட்டு கவுரவம் பார்க்கின்றது. தமிழக அரசின் இத்தகைய செயல்பாடு மிகவும் வேதனையளிக்கிறது.


காவிரி ஆற்றில் இருந்தும், கிருஷ்ணாவில் இருந்தும் முறையாக நீர் கிடைக்க வில்லை. இவற்றை பெற்றால் கூட சென்னை பெருநகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க இயலும்,


இதற்காக டெல்லியில் அழுத்தம் கொடுப்பதற்கு பதில் யாகம் வளர்ப்பது மெத்தனப்போக்கு, தமிழகக்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். வரக் கூடிய நாட்களில் சென்னை மட்டுமல்ல, தமிழகமே குடி நீரின்றி தவிக்கும் சூழல் உருவாகும்.


மேற்கு தொடர்ச்சி மலையில் குடிநீரின்றி வன விலங்குகள் உயிரிழக்கும் செய்திகள் தினம் தினம் வெளியாகி அனைவரையும் வேதனையில் ஆழ்த்துகிறது. இது தேசத்தின் பிரச்சனை என்பதால் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும்" என குறிப்பிட்டார்.