கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம் என தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தை தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். அம்மா உணவகத்தில் சமூக இடைவெளி முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறதா?  என்பதையும், உணவின் தரம் குறித்து சோதனை செய்தார். மேலும், உணவின் தரம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து கலங்கரை விளக்கம் அருகே உள்ள அம்மா உணவகத்திலும் ஆய்வு செய்தார்.


சென்னையில் அம்மா உணவகங்களில் ஆய்வு செய்தபின் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்.... அம்மா உணவகங்களில் உணவின் தரம் குறித்தும், அவற்றில் பின்பற்றப்படும் விதிகள் மற்றும் உரிய இருப்பு, சமையல் அறை சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டோன். அம்மா உணவகங்களில் தயாரிக்கப்டும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தேன். பல்வேறு மாநிலங்களில் பாராட்டப்பட்ட அம்மா உணவக திட்டம் இன்று மக்களுக்கு முழுமையாக கைகொடுக்கிறது. 


அம்மா உணவகத்தில் உணவு தரமாகவும், சுவையாகவும் இருந்ததாக பாராட்டு தெரிவித்த முதலமைச்சர், அம்மா உணவகத்தில் தினமும் 4.5 லட்சம் பேர் உணவருந்துகின்றனர். அம்மா உணவகங்களில் மட்டும் தான் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி தரப்படுகிறது. மேலும், டெல்லி மாநாட்டில் பங்கேற்றோர் விவரங்கள் தெரியாததால் அரசுக்கு தாங்களாகவே தெரிவிக்க கோரியுள்ளோம். தாங்களாகவே முன்வந்து தெரிவித்தால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்படும். 


கொரோனா அறிகுறி இருந்தால் ஈஷா கூட்டத்தில் பங்கேற்றவர்களையும் சோதனைக்கு உட்படுத்துவோம். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். அதனால்தான் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் சட்டத்தை பொதுமக்கள் மதிக்க வேண்டும். கொரோனா நோய்த்தொற்றின் தாக்கத்தை அறியாமல் மக்கள் வெளியே வருகின்றனர். மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கரோனா தொற்று பரவலை தடுக்க முடியும். கோயில், தேவாலயம், மசூதிகள் மூடப்பட வேண்டும்.  சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.


தமிழகத்தில் ஏற்கெனவே 17 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு பிறகு என்ன நிலை என்பதை மத்திய அரசு முடிவு செய்யும் என்று முதல்வர் கவலை தெரிவித்துள்ளார்.