தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் - தமிழக பாஜக சர்ச்சை பேச்சு!

தமிழக அரசு 1 வாரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அவர் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
மத்திய அரசு டீசலுக்கு ரூ.10-ம், பெட்ரோலுக்கு ரூ.5-ம் குறைத்து மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டத்தை குறைத்தது. அதே சமயம் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவர்களது மாநில அளவிலான வாட் வரியை குறைத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தங்கள் பங்கிற்கு குறைத்துள்ளது.
தமிழகத்தை விட மற்ற மாநிலங்களில் பெட்ரோல்-டீசல் விலை குறைவாக இருந்து வருகிறது. எனவே தமிழக அரசு பெட்ரோல்-டீசல் விலையை குறைக்க கோரியும், கேஸ் சிலிண்டர் விலையை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி சிலிண்டருக்கு ரூ.100 குறைக்க கோரியும் தமிழக அரசை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்பின்படி பாஜகவின் பல்வேறு அணிகள் மாட்டு வண்டி ஆர்ப்பாட்டம், முக்கிய பிரமுகர்களை சந்தித்து கோரிக்கையை விளக்குதல், மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முற்றுகை போராட்டம், மனித சங்கிலி ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களை கடந்த ஒரு வாரகாலமாக முன்னெடுத்து நடத்தினர்.
அரியலூர் மாவட்டம் ஜெயன்கொண்டத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றியும், தமிழக அரசை பற்றியும் தரக்குறைவாக பேசியதாக தமிழக பாஜக மாநில ஓ.பி.சி அணியின் மாநில துணை தலைவர் அகோரம் சீர்காழியில் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் ஐயப்பன் அரசுக்கு எதிராகவும் வன்முறையை தூண்டும் வகையிலும் அரசை எச்சரிக்கும் வகையில் பேசியதாக வாலாஜா நகர விஏஓ அரியலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து ஜெயங்கொண்டம் வேலாயுத நகர் வீட்டில் இருந்த பாஜக மாவட்டத் தலைவர் ஐயப்பனை அரியலூர் போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஐயப்பன் திமுக எத்தனை நாளைக்கு ஆட்சியில் இருக்கும் என்பது எங்களுக்குத்தான் தெரியும் எனவும் மத்திய அரசு ரெய்டு விடுவதற்கு தயாராக உள்ளது எனவும் நாங்கள் தான் அதனை தடுத்து வைத்து உள்ளோம் எனவும் தமிழக அரசு 1 வாரத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்துவோம் என அவர் பேசியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR