தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு -வானிலை மையம்!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பபுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பபுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது!
தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு மற்றும் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் காரணமாக கடந்த ஒரு வாரமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில்..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.
சென்னையை பொறுத்தவரையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.