இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். தாழ்வு மண்டலமாக மாறி டிசம்பர் 7-ம் தேதி வாக்கில் தெற்கு ஆந்திரா, வட தமிழகம் நோக்கி வரக் கூடும். 


அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். டிசம்பர் 5-ம் தேதி முதல் தெற்கு ஆந்திரா, வட தமிழக ஆழ்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என பாலச்சந்திரன் எச்சரித்துள்ளார்.