திமுக எம்.பி.,க்கள் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, நடந்த பிரச்னை தொடர்பாக கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து புகார் அளித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிறகு திருச்சி சிவா கூறியதாவது:- 


சபாநாயகர் ஒரு தலைபட்சமாக செயல்படுகிறார். எதிர்க்கட்சி இல்லாமல் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது முரண்பாடாக உள்ளது. போலீசார், சட்டசபை அவைகாவலர்கள் போல் வேடமணிந்து உள்ளே வந்தனர். இது தொடர்பான ஆதாரத்தை கவர்னரிடம் வழங்கியுள்ளோம். சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பை செல்லாது என அறிவிக்க வேண்டும் என மு.க. ஸ்டாலின் கடிதம் கொடுத்தார். அதனை கவர்னரிடம் வழங்கியுள்ளோம். புகார் தொடர்பாக பரிசீலனை செய்வதாக கவர்னர் கூறியுள்ளார் என தெரிவித்தார்.