எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு? கூறிய ஓபிஎஸ்! எதற்கு தெரியுமா?
முதல்வர் பதவியிலிருந்து விலகி ஒரு வருடம் ஆனதில் வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு `எதைக் கொண்டு வந்தோம் இழப்பதற்கு` என பன்னீர்செல்வம் பதில் கூறினார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று ஜெயலலிதா உருவ படத்தை எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சென்னை அம்மா பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமை தாங்கினர்.
கூட்டம் முடிந்ததும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து பேரவை கூட்டத்தில் ஆலோசித்தோம் ஏழை, எளியோருக்கு உதவிகள், ரத்ததானம் செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது என்றார்.
இந்நிலையில், "நீங்கள் முதல்வர் பதவியை இழந்து ஓராண்டு ஆகிறது. அது குறித்து வருத்தம் இருக்கிறதா?" என செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, "இது ஒரு நல்ல கேள்வி, எதைக் கொண்டுவந்தோம் அதை நாம் இழப்பதற்கு?" என தத்துவார்த்த ரீதியாக பதிலளித்தார்.
"எதை நீ கொண்டு வந்தாய் அதை இழப்பதற்கு எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது. என்று ஓபிஎஸ்.ஸும் பதிலளித்திருக்கிறார்.
மேலும், அம்மா உணவகங்கள் நஷ்டத்தில் இயங்குவது தொடர்பான கேள்விக்கு, "அம்மா உணவகங்கள் லாப நோக்கத்துக்காக தொடங்கப்படவில்லை. அது ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் தொடங்கப்பட்டது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.