புது டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) ஜனதா ஊரடங்கு (Janta Curfew) உத்தரவைப் பின்பற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி நேற்று (வியாழக்கிழமை) நாட்டு மக்களிடம் வலியுறுத்தினார். கோவிட் -19 (Covid-19) தொற்றுநோயை கையாள்வதில் மக்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும் எச்சரித்த பிரதமர் மோடி, சுமார் 30 நிமிட தேச மக்களிடம் உரையாற்றினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று அவர் பேசுகையில், Janta Curfew என்ற வாரத்தையை பயன்படுத்தினார். பலருக்கு இதன் அர்த்தம் புரியவில்லை. அதுவும் குறிப்பாக தென்னிந்திய மக்கள் புரிந்துக்கொள்வது சற்று கடினம் தான். ஏனென்றால் Janta என்ற வாரத்தை இந்தி மொழி ஆகும். அதன் அர்த்தம் மக்கள் (Janta).


அதாவது கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக நாட்டில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. மேலும் கூட்டமாக யாரும் இருக்க வேண்டாம். கூட்டம் கூடும் இடத்தற்கு செல்ல வேண்டாம் என்றெல்லாம் மத்திய, மாநில அரசுகளால் அறிவுறுத்தப்படுகிறது. ஆனாலும் மக்கள் பல இடங்களில் இன்னும் கூட்டமாக இருக்கிறார்கள். இதனால் இது கொரோனோ பரவதற்கு வாய்ப்பு அதிகம்.  


இந்தநிலையில், நேற்று பேசிய பிரதமர் மோடி, “இன்று, நான் ஒவ்வொரு குடிமகனிடமிருந்தும் ஒரு ஆதரவை நாடுகிறேன். இது ஜந்தா ஊரடங்கு உத்தரவு. அதாவது ஊரடங்கு உத்தரவு போட்டால், எப்படி இருக்குமோ அப்படி ஒரு நிலையை மக்களாகவே ஏற்படுத்திக்கொண்டு வீடுகளுக்குள் இருக்க வேண்டும். யாரும் வெளியே வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


இந்த ஜந்தா ஊரடங்கு உத்தரவு 14 மணி நேரம் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை. இந்த காலகட்டத்தில் சாலைகள் மற்றும் பொது இடங்களில் இருந்து விலகி இருக்குமாறு பிரதமர் மக்களை கேட்டுக்கொண்டார். இருப்பினும் போலீஸ் ஊடகங்கள், மருத்துவ சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் ஊரடங்கு உத்தரவின் கீழ் வராது என்று அவர் தெளிவுபடுத்தினார்.


"மார்ச் 22 அன்று அரசு மேற்கொள்ளும் இந்த முயற்சி, நம்முடைய கட்டுப்பாட்டின் அடையாளமாகவும், தேசத்தின் நலனுக்காக நமது கடமையைப் பின்பற்றுவதாகவும் இருக்கும். ஜந்தா ஊரடங்கு உத்தரவின் வெற்றி, அதன் அனுபவம் எதிர்கால சவால்களுக்கு நம்மை தயார்படுத்தும்” என்று பிரதமர் மோடி கூறினார்.


"மார்ச் 22 அன்று, ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு, மக்கள் அவரவர் வீடுகளின் கதவுகள், பால்கனிகள், ஜன்னல்கள் அருகில் நின்று ஐந்து நிமிடங்கள் நன்றியைத் தெரிவிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். மக்கள் கைதட்டி அல்லது மணி ஒலிப்பதன் மூலம் அவ்வாறு செய்யலாம் என்றார்.


ஜந்தா ஊரடங்கு உத்தரவு பரவலாக பாராட்டப்பட்டது. பல பாலிவுட் நடிகர்கள் பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனையை கவனிக்க தங்கள் ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.