புதுடெல்லி: 22 ஆண்டுகளுக்கு பிறகு சித்தி மெகாத் தொடரின் இரண்டாம் பாகம் பிரபல தமிழ் தொலைகாட்சியில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ராதிகா தொடரில் இருந்து விலகியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராதிகாவின் விலகலுக்கான காரணம் என்ன என்பது தொடர்பாக பலரும் பலவிதமான கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் ராதிகா தொடரில் இருந்து விலகுவதை அவரே, தனது டிவிட்டர் பதிவின் மூலம் அறிவித்துவிட்டார்.


தமிழ் சினிமாவில் தனது பெயரை முத்திரையாய் பதித்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ராதிகா. திரையுலகில் மட்டுமல்ல, சின்னத்திரையிலும் தடம் பதித்து தனக்கென ஒரு முக்கியமான இடத்தை பிடித்தவர் ராதிகா சரத்குமார்.


Also Read | நாட்டியம் பட teaser release: அழகாய் ஜொலிக்கிறார் ராம்கோ குழுமத்தின் புதிய நட்சத்திரம் சந்தியா ராஜு!!


நடிகை ராதிகா தனியார் தொலைகாட்சியில் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2001 வரை ஒளிபரப்பான சித்தி மெகாத் தொடரின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்தவர். 


அதைத் தொடர்ந்து பல தொலைகாட்சித் தொடர்களை தயாரித்தும் நடித்தும் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் ராதிகா. அவர் நடித்த சரித்திர தொடர் சந்திரகுமாரி. அதற்கு போதிய வரவேற்பு கிடைக்காததால், ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டது. இதனால் சந்திரகுமாரி சீரியலில் இருந்து ராதிகா விலகினார். அதைத் தொடர்ந்து, விரைவில் சீரியலையும் முடித்துவிட்டனர். 


இந்த சம்பவம் நடைபெற்ற குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு, ’சித்தி’ தொடரின் இரண்டாம் பாகத்தை தொடங்கினார் ராதிகா சரத்குமார். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திற்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், திடீரென்று  சித்தி 2 தொடரில் இருந்து விலகுவதாக ராதிகா அறிவித்தது பல்வேறு ஊகங்களை ஏற்படுத்தியுள்ளது.


Also Read | தேர்தல் பிரச்சாரத்தில் Captain Vijayakanth: சிலிர்த்து போன சின்ன கௌண்டர் ரசிகர்கள்


சநதிரகுமாரி தொடர் போலவே சித்தி இரண்டாம் பாகமும் முடிந்துவிடும் என்றும் வதந்திகள் உலா வருகின்றன. சித்தி 2 தொடரில் இருந்து விலகுவதாக டிவிட்டரில் தெரிவித்த ராதிகா சரத் குமார், தன்னுடன் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் சக நடிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.  



பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த சித்தி தொடரின் நேரம் மாற்றியமைத்ததையும், சந்திரகுமாரி தொடரில் இதுபோலவே நடந்ததை ஒப்பிடுகின்றனர். நேர மாற்றத்தை ராதிகாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், இதனால் ஏற்பட்ட மனக்கசப்பில் ராதிகா வெளியேறிவிட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். 


கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த  நடிகை ராதிகா, தனது கணவர் சரத்குமாருடன் இணைந்து தீவர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். இதனால் அரசியல் காரணங்களுக்காக அவர் சித்தித் தொடரில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.


Also Read | Oscars 2021 போட்டியில் இருந்து வெளியேறியது ‘ஜல்லிக்கட்டு’, உள்நுழைந்தது ‘பிட்டு’


அதுமட்டுமல்ல, ராதிகா சரத்குமாரின் அரசியல் நுழைவும், அவர் எந்த கூட்டணியில் இடம் பெறுவார் என்பதையும் பொறுத்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 


எது எப்படியிருந்தாலும் சரி, சீரியல் மூலம் ரசிகர்களின் வீடுகளுக்கு நேரடியாக வந்துக் கொண்டிருந்த ராதிகா சரத்குமார் அரசியல்வாதியாக தொலைகாட்சியில் வீடுகளுக்கு வரும் வாய்ப்பையும் மறுக்க முடியாது.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR