நடிகர் விஜய் யார்? சிரித்து கொண்டே பதிலளித்த சுப்பிரமணிய சுவாமி!
காங்கிரசாக இருக்கட்டும் அல்லது அமித்ஷாவாக இருக்கட்டும் யாராலும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரை கெடுக்க முடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி பேட்டி.
காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணி சாமி இன்று வருகை புரிந்தார். அங்கு காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை நேரில் சந்தித்து ஆசி பெற்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுப்பிரமணிய சுவாமி தெரிவித்ததாவது, மதுராவிற்கு கிருஷ்ணருக்கு கோயில் கட்ட வேண்டும். நமது கலாச்சாரத்தை நாம் மறந்து விட்டோம். தமிழ் மொழியில் சமஸ்கிருதம் இருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் நான் நேரடியாக ஒருமுறை கூறினேன் கருணாநிதி என்ற பெயர் சமஸ்கிருதம். கட்சியின் சின்னமாக இருக்கக்கூடிய உதயசூரியன் கூட சமஸ்கிருதம் என தான் கூறியிருந்தேன். நம்மைப் பிரிக்க வேண்டும் என நினைப்பவர்களிடம் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | டிசம்பர் மாத சம்பளம்.. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு GOOD NEWS
அமித்ஷா எவ்வளவு கேவலமாக பேசினாலும் அம்பேத்கரின் பெருமையை குறைக்க முடியாது. இதை ஜவகர்லார் நேரு கூட செய்தார். நேரு அவர் தோற்க வேண்டும் என நேரடியாக சென்று காவல்துறையை எல்லாவற்றையும் பயன்படுத்தி அவரை தோற்கடிக்க வைத்தார். இரண்டாவது முறை அவர் போட்டியிட்ட போதும் அவரை தோற்கடித்தார். காங்கிரஸ் கட்சி தற்போது அமைச்சர் மீது விமர்சனம் வைக்கிறார்கள் ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள்? என கேள்வி எழுப்பினார். அம்பேத்கர் அமைச்சராக இருக்கும்போது அமைச்சர் பதவியில் இருந்து வெளியே அனுப்பினார்கள் என குற்றம் சாட்டினார். அம்பேத்கர் வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு படிப்புகளை படித்தார். நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவரே அவர்தான்.
காங்கிரசாக இருக்கட்டும் அல்லது அமித் ஷாவாக இருக்கட்டும் யாராலும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரை கொடுக்க முடியாது என தெரிவித்தார். மேலும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முயற்சியால் தான் அயோத்தியில் ராமர் கோயில் இருக்கிறது. ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலை ராமர் கோவில் அருகில் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனையடுத்து நடிகர் விஜய் அரசியல் குறித்து கேள்வி கேட்டதற்கு, நடிகர் விஜய் யார் என கண் அடித்தபடி சிரித்து கொண்டே சுப்பிரமணிய சுவாமி பதிலளித்தார்.
வேலுநாச்சியாருக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அஞ்சலி!
வீரமங்கை வேலுநாச்சியாரின் நினைவு தினத்தையொட்டி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அஞ்சலி செலுத்தி உள்ளார். "மண்ணைக் காக்க வாளேந்திப் போர்க்களம் புகுந்த வீரப் புரட்சியாளர், இந்தியாவின் முதல் விடுதலைப் பெண் போராளி, அனைத்துச் சமூகத்தினரோடும் நல்லிணக்கத்தோடு நாடாண்ட தமிழச்சி, எம் கழகத்தின் கொள்கைத் தலைவர், வீரமங்கை, ராணி வேலு நாச்சியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி, எமது அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன்" என்று X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க | Pongal Parisu | பொங்கல் சிறப்பு தொகுப்பு - ரேசன் கடைகளில் எப்போது வரை கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ