யார் இந்த முரசொலி செல்வம்? திமுக-வின் முக்கிய நபர்..முதல்வரின் அன்பு மச்சான்!
Who Is Murasoli Selvam Biography : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மச்சானும், திமுக கட்சியின் முதன்மை பொறுப்பில் இருந்தவருமான முரசொலி செல்வம் 85 வயதில் மரணம் அடைந்துள்ளார்.
Who Is Murasoli Selvam Biography : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மச்சானும், முரசொலி பத்திரிகையின் ஆசிரியராகவும் இரூந்த முரசொலி செல்வம் உயிரிழந்திருக்கிறார். இதனால், திமுக கட்சியினரே சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். யார் இந்த முரசொலி செல்வம்? இவர் குறித்த விவரங்களை இங்கு பார்ப்போம்.
முரசொலி செல்வம் இறப்பு-ஸ்டாலின் பதிவு:
முரசொலி செல்வம் இறந்ததையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இதில், தனக்கு அண்ணனாக, வழிகாட்டியாக இருந்த அண்ணன் முரசொலி செல்வத்தை இழந்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
தலைவர் கலைஞரை பிரிந்த பிறகு, தனக்கு சாய்வதற்கு கிடைத்த கடைசி தோளை இழந்து நிற்பதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் படிக்க | ஸ்டாலின் மகன் என்ற பிறப்பால் வந்தது தான் துணை முதலமைச்சர் பதவி - ஆர்பி உதயகுமார்!
யார் இந்த முரசொலி செல்வம்?
திமுக கட்சியின் பத்திரிகையான, முரசொலி நாளிதழ் ஆசிரியராக (Editor) இருந்தவர் முரசொலி செல்வம். இவர். சிலந்தி என்ற பெயரில் முரசொலி பத்திரிகையில் செய்திகளை எழுதி வந்தார். சொல்லப்போனால், இறப்பதற்கு ஒரு நாள் முன்னர் கூட அந்த பத்திரிகையில் ஒரு செய்தியை எழுதியிருக்கிறார்.
ஸ்டாலினின் சகோதரி முன்னாள் முதலமைச்சரும், தமிழகத்தின் பெரும் தலைவர்களுள் ஒருவரான கருணாநிதியின் மருமகனான இவர், அவரது மகள் செல்வையை மணம் முடித்தார். திமுக கட்சியில் அளப்பறிய பணிகளை ஆற்றியிருக்கும் இவர், தனது மனைவி மற்றும் மகளுடன் பெங்களூருவில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது 82 வயதில், மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
சட்டப் பேரவையின் சிறப்புரிமைகளை மீறியதாகக் கூறி, இவருக்கு அரசு தரப்பில் 1992ஆம் ஆண்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இவர் குறித்த செய்திகள் தலைப்பு செய்திகளாக மாறியது.
முரசொலி பத்திரிகையின் வளர்ச்சிக்கும், அதை வழிகாட்டி கொண்டு செல்வதற்கும் முரசொலி செல்வம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டதாக, மு.க ஸ்டாலின் சில முறை ஊடகத்தினரிடம் நினைவு கூர்ந்திருக்கிறார்.
இவர், கலைஞர் மற்றும் முரசொலி மாறன் இருவரின் சிந்தனைகளையும் வடிவமைத்து, ஜனநாயகத்தின் உண்மையான குரலாக பணியாற்றியதாக பலமுறை ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
முரசாெலி செல்வத்தின் மறைவையொட்டி, திமுக கட்சியின் கொடி 3 நாளைக்கு அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | சொந்த சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றாரா முக ஸ்டாலின்? எடப்பாடி பழனிசாமி கேள்வி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ