பிரேமலதாவின் பேராசையால் தான் விஜயகாந்த் இந்த நிலைக்கு தள்ளப்பட்டார் என எம்.பி., பார்த்திபன் தனியார் நாளிதழுக்கு அளித்த பேட்டி கவனம் பெற்று வருகிறது. அப்படி என்ன செய்தார் பிரேமலதா? பின்னணி என்ன என்பதை காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2005-ம் ஆண்டு செப்டம்பர் 14-ம் தேதி மதுரையே விழா கோலத்தில் காட்சி அளித்தது. ஒட்டு மொத்த இளைஞர் படையும் விஜயகாந்த் நடத்திய மாநாட்டில் குவிந்தனர். லட்சக்கணக்கானவர்கள் மைதானத்தில் குவிந்ததால், தமிழக அரசியலே ஸ்தம்பித்தது. அன்று தான் தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியை தொடங்கினார் விஜயகாந்த். அதன்பிறகு சினிமாவுக்கு பிரேக் விட்டு விட்டு முழு நேரம் அரசியலில் களம் இறங்கினார். ஆரம்பத்தில் ஏளனமாக இவரது அரசியல் வருகையை பேசியவர்கள், அதன்பின் அவரது வளர்ச்சியை கண்டு மிரண்டனர். 


2011-ம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தின் அசைக்கமுடியாத கட்சியாக இருந்த திமுக-வையே அசத்து எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றார். இப்படி ஓஹோ என அரசியலில் அடுத்தடுத்து ஏணிப்படியில் ஏறியவர் திடீரென சறுக்கியது தான் தேமுதிக தொண்டர்களை நிலைகுலைய செய்தது. அப்படி என்ன நடந்தது? 


கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கட்சி எடுத்த தவறான முடிவால் தான் தேமுதிக என்னும் ஆலமரம் அப்படியே விழுந்தது. அப்போது என்ன நடந்தது என்பது குறித்து தனியார் இதழுக்கு பேசிய எம்.பி., பார்த்திபன், கட்சிக்குள் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவின் ஆதிக்கத்தால் கட்சியை விட்டு பலர் வெளியேறினார்கள்.  இப்போதும் அதேநிலைதான் நீடிக்கிறது என்று கூறியுள்ளார். 2009 வரை கட்சி நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது என்றும், பிரேமலதாவின் ஆதிக்கம் வந்த பிறகுதான் கட்சி சீரழிந்து போனது என்றும் ஆவேசமாக கூறியுள்ளார்.  அதோடு அவர் திடுக்கிடும் தகவல் ஒன்றையும் தெரிவித்தார். அதாவது 2011-ம் ஆண்டு நடந்த தேர்தலில் தி.மு.கவுடன் கூட்டணி வைக்கத்தான் விஜயகாந்தும் விரும்பியதாகவும், ஆனால் பிரேமலதா  ஜெயலலிதா, சசிகலாவின் பேச்சைக் கேட்டு அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்ததாகவும் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார். பிரேமலதா எடுத்த முடிவு தான் கட்சியை இப்படி ஆக்கியதாகவும் கூறியுள்ளார். 


மேலும் படிக்க | மருத்துவர்கள் சொல்லியும் கேட்காமல் 2016 -ல் பிரச்சாரத்துக்கு சென்ற விஜயகாந்த்


தேமுதிகவின் ஆரம்பகட்ட வளர்ச்சி திமுக, அதிமுக கட்சிகளுக்கு இடையே சற்று அச்சத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். பாமக கட்சியுடனான மோதலுக்கு பின்னால், அரசியலில் குதித்தவர் பாமகவை விட அதிக வாக்கு வங்கியைப் பெற்றார். தேமுதிகவின் கடைகோடித் தொண்டன் கூட எளிதாக அவரை அணுகிவிட முடியும். அந்த அளவுக்கு அவர் தொண்டர்களுடன் நெருக்கமாக இருந்தார். கட்சிக்காரர்கள், சினிமாக்காரர்கள் யார் வந்தாலும் அவரது அலுவலகத்தில் கல்யாண விருந்து போல ஒரு சாப்பாடு காத்திருக்கும். இப்படி செங்கல் செங்கலாய் கட்சியை கட்டியவர் 2016-க்கு பிறகு சந்தித்த தோல்வி சொல்லிமாலாது. 


2011-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அபார வெற்றி பெற்று திமுக-வையே பின்னுக்கு தள்ளியது தேமுதிக. எதிர்கட்சித் தலைவரான அவருக்கு அவரது உடல்நிலை மோசமானது எதிரிகளுக்கு சாதகமானது. அடுத்தடுத்து சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் இறங்கு முகம் தான். கட்சிக்குள் பிரேமலதா மீது அதிருப்திகள் இருப்பதாக கூறப்பட்டாலும், சில தினங்களுக்கு முன்பு விஜயகாந்த் தலைமையில் பொதுக்குழுவைக் கூட்டி தன்னை பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டார். இனி தேமுதிக கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகள் அவர் எடுக்கும் முடிவில் தான் உள்ளது. என்ன நகர்வுகளை எடுத்து வைப்பார். நாடாளுமன்றத்தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை பொருத்தே கட்சியின் தலையெழுத்து எப்படி அமையும் என்பதை கணிக்க முடியும்.


மேலும் படிக்க | விஜயகாந்த் அரசியல் வாழ்வின் திருப்பம்... மண்டபம் இடிப்பு - தேமுதிக அலுவலகம் உருவான கதை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ