சென்னை; கடந்த செப்டம்பர் 22-ம் தேதி 2016-ம் ஆண்டு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து, அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிச.21-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, தி.மு.க. மட்டும் அ.தி.மு.க சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது எழுந்த பணம் பட்டுவாடா புகாரால் தேர்தல் தடை செய்யப்படிருந்தது. அதை தொடர்ந்து ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் உத்தரவின் பேரில் சென்னை ஆர்.கே.நகருக்கு, டிசம்பர் 21-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதற்காக விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.


தற்போது, ஓபிஎஸ்- எடப்பாடி என்ற இரு அணிகளும் இணைந்து இரட்டை இலை சின்னம் பெற்றனர். அதை தொடர்ந்து ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தலில், அதிமுக வேட்பாளராக மதுசூதனன் மீண்டும் நியமிக்கப்படுவது  தொடர்பாக ஓபிஎஸ்-எடப்பாடி அணியிடையே குழப்பம் நிலவி வருகின்றது.


ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளராக முதலில் கே.பி. முனுசாமியை நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் கே.பி. முனுசாமி தயக்கம் காரணமாக மதுசூதனன் வேட்பாளராக்கப்பட்டார்.  அதன் பின் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 


இந்நிலையில், ஆர்.கே.நகரில் கே.பி. முனுசாமி போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது. அதேசமயம் எடப்பாடி தரப்பினர் மற்றொரு வேட்பாளரை நிறுத்தலாம் என்றும் ஆலோசித்து வருகிறது.
அதை தொடர்ந்து ஓபிஎஸ்ஸை மதுசூதனன் சந்தித்தும் பேசியிருக்கிறார்.


இதனையடுத்து, ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின் அதிமுக வேட்பாளர் யார் என்ற முடிவு அறிவிக்கப்படாத நிலையில் இரு அணிகளிடையே குழப்பம் நிலவி வருகிறது.