மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனது வீட்டில் கீழே தள்ளப்பட்டார். பிறகே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பி.எச்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதைக்குறித்து பி.எச்.பாண்டியன் கூறியதாவது:-


சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெ., மரணம் தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனை ஒரு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் டிஸ்சார்ஜ் அறிக்கையும் இடம் பெற்றுள்ளது. அதில் பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன.


கடந்த ஆண்டு போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா கீழே தள்ளப்பட்டார். அதன் பிறகே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என அப்பல்லோ மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


போயஸ் கார்டன் வீட்டிலும், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. அப்பல்லோ மருத்துவமனையிலும் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தன. ஆனால் ஜெயலலிதா சிகிச்சைக்காக அங்கு அட்மிட் ஆனதும் 27 கண்காணிப்பு கேமராக்கள் அகற்றப்பட்டுள்ளன. எனவே, போயஸ் கார்டன் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வெளியிட வேண்டும். 


ஜெயலலிதாவின் உயிர் இயற்கையாக பிரியும் வகையில், அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையை நிறுத்த அனுமதி அளித்தவர் யார்?. குடும்ப உறுப்பினர் அல்லாத ஒருவர் அந்த அனுமதி அளித்தது ஏன்? சிங்கப்பூரில் உள்ள எலிசபெத் மருத்துவமனையில் ஜெயலலிதாவை சேர்க்க வசதியாக, சென்னைக்கு பாரா ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை அனுப்பியதாக மத்திய அரசின் ரகசிய தகவல் கூறுகிறது. அந்த முயற்சியை தடுத்தது யார்?. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களின் அறிக்கையை இன்னும் வெளியிடாதது ஏன்? என பி.எச்.பாண்டியன் கூறினார்.