தழகத்தில் இரண்டு தொகுதிகளை தவிர 232 தொகுதிகளில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் சராசரியாக 73.76 சதவீதம் வாக்குப்பதிவானது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு  5 அடுக்கு பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள 68 மையங்களில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் வீடியோவுடன் கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது இதில் போலீஸார், துணை ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறினார். 


தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவித பாதிப்பு ஏற்படாமல் இருக்க முன்னேச்சிரிக்கை நடவடிக்கை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார்.