சென்னை: முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

16 நர்சுகள் 3 ஷிப்ட்களாக பணிபுரிந்து அவருக்கு தேவையான உதவிகளை செய்தனர். அவர்களில் சி.வி. ஷீலா, எம் வி ரேணுகா மற்றும் சாமுண்டிஸ்வரி என்ற 3 நர்சுகள் ஜெயலலிதாவுக்கு மிகவும் விருப்பமானவர்களாக இருந்துள்ளனர். 


இவர்கள் மூன்று பேரையும் "கிங் காங்" என்றே செல்லமாக அழைப்பாராம் ஜெயலலிதா.


சிவி ஷீலா கூறுகையில், பல நேரங்களில் ஜெயலலிதா எங்களிடம், நான் என்ன செய்ய வேண்டும் எனக்கூறுங்கள். அதனை செய்கிறேன் என்பார். 


நாங்கள் அவர் தங்கியிருந்த அறைக்குள் வந்த உடன், எங்களிடம் சிரித்து பேசுவார். எங்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருகிறார். நாங்கள் அருகில் இருக்கும் போது, சிரமத்திற்கு மத்தியிலும் உணவுகளை சாப்பிட்டார்.


எங்களது விருப்பத்திற்காக ஒரு ஸ்பூன் உணவு, அவருக்காக ஒரு ஸ்பூன் உணவு என மாறி மாறி சாப்பிட்டார். 


ஜெயலலிதாவுக்கு உப்புமா, பொங்கல், தயிர் சாதம் மற்றும் உருளைக்கிழங்கு கறி உணவில் சேர்க்கப்பட்டது.


கடந்த செப்டம்பர் 22-ம் தேதி நள்ளிரவு, ஜெயலலிதா அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை டாக்டர்கள் தீவிர முயற்சி செய்து காப்பாற்றினர். சிகிச்சை முடிந்த நான்கு மணி நேரத்திற்கு பிறகு அவர் சான்விச் மற்றும் காபி கேட்டார்.


ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நீண்ட பயணமாக இருந்ததாக டாக்டர் ஆர்.செந்தில்குமார் கூறினார்.


மருத்துவ இயக்குனர் டாக்டர் சத்ய பாமா கூறுகையில், பணியில் இருந்த டாக்டர்களுக்கு தோல் பராமரிப்பு தொடர்பாக ஆலோசனை வழங்குவார். 


நவம்பர் 22-ம் தேதி நடைபெற்ற இதைதேர்தலை ஜெயலலிதா தொலைக்காட்சியில் பார்த்தாக டாக்டர் பாமா கூறியுள்ளார்.


நன்றாக குணமாகி வந்த அவருக்கு 4-ம் தேதி மாலை திடீரென கார்டியாக் அரஸ்ட் ஏற்ப்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி இரவு 11-30 மணி அளவில் உயிர் இறந்தார். உயிர் இழந்த அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நேற்று இரவு அடக்கம் செய்யப்பட்டது.