ஈரோடு : தமிழகத்திற்கு கடந்த 10ஆண்டுகளில் 10லடசத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்துள்ள நிலையில் வரும் நாடளுமன்ற தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் காட்டும் புதிய வித்தைகளெல்லாம் எடுபடாது என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா தெரிவித்துள்ளார்... 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் நாடளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற இருப்பதால் பாஜகவின் சார்பில் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற வேண்டிய கோரிக்கைகளை மோடியின் உத்தரவாதம் என்ற அடிப்படையில் பிரசாரம் செய்துவரும் பாஜக கட்சி சார்பில் எச் ராஜா தலைமையிலான குழுவினர், வாக்குறுதி குறித்து கருத்து கேட்டு வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக ஈரோடு வந்த எச். ராஜா தலைமையிலான பாஜகவினர் விசைத்தறி உரிமையாளர்கள், சிறு குறு தொழில் உரிமையாளர்கள் வணிகர்கள் என பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய எச் ராஜா, பிரதமர் கடந்த மூன்று ஆண்டுகளில் பலமுறை தமிழகம் வந்துள்ளார். பிரதமர் மட்டும் தான் தேர்தலுக்காக வருகிறாரா, திமுக உள்ளிட்ட கட்சிகள் மக்களிடம்  போகவில்லையா? என்று கேள்வி எழுப்பினார்.


தமிழகத்தின் கள்ளுக்கடை திறந்து தமிழக மக்களின் குடியை கெடுத்த குடும்ப கருணாநிதி குடும்பம், தமிழ்நாட்டை போதை பொருட்களின் உறைவிடமாக மாற்ற முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டிய எச். ராஜா, ஜாபர் சாதிக் கடந்த 2006ம் ஆண்டு கடத்தல் வழக்கில் கைதானவர் என்பது திமுகவுக்கு தெரியாதா என்று கேள்வி எழுப்பினார். 


மேலும் படிக்க | திண்டுக்கல் மக்களவைத் தொகுதி களம் காணும்.. யார் இந்த தோழர் ஆர். சச்சிதானந்தம்?


மங்கை திரைப்படத்திற்கு முழுமையாக நிதி அளித்தவர் ஜாபர் சாதிக், இதனால் போதை பொருள் கடத்தலில் திமுகவுக்கு சம்மந்தம் இல்லை என்று எப்படி கூற முடியும் என கேள்வி எழுப்பினார்.  வரும் நாடளுமன்ற தேர்தலில் மக்களிடம் புதிதாக வித்தைகள் காட்ட முதல்வர் ஸ்டாலின் களம் இறங்கி உள்ளார், ஆனால் மக்கள் திமுக வித்தைகளை நம்ப மாட்டார்கள் என்றார். 


தற்போது நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் என்பது வளர்ச்சிக்கான தேர்தல் எனக்கூறிய அவர், திமுக தமிழர் இன விரோதிகள் துரோகிகள் இருக்க கூடிய கட்சி என்று சாடினார். பாரதிய ஜனதா கட்சியின் கடந்த 10ஆண்ட ஆட்சியில் 10லட்சத்து 60ஆயிரம் கோடிக்கு தமிழகத்திற்கான திட்டம் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தார். 


கள் என்பது உணவு சார்ந்து என்பதாலும், விவசாயிகள் வருமானம் சார்ந்து என்பதாலும், பாஜக தலைவர் அண்ணாமலை கள்ளுக்கடை திறப்பு குறித்து பேசி இருப்பார் என்று தெரிவித்த எச். ராஜா, மழைநீர் வடிகால் பணிக்காக சென்னைக்கு 4ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு கொடுத்தது ஆனால் முறையாக செயல்படுத்தவில்லை என்று குற்றம் சாட்டினார். 


மேலும் படிக்க | வட மாநில சிறுவனை கொடூரமாக தாக்கிய பள்ளி மாணவர்கள்! காரணம் என்ன?


திமுக  அரசு செயல்படுத்தும் திட்டத்தில்  60 சதவீதம் திருடப்படுகிறது என்று குற்றஞ்சாட்டிய எச். ராஜா, பாஜக கூட்டணியைப் பொறுத்தவரை தேமுதிக, பாமக கூட்டணிக்குள் வருவது குறித்து தேசிய தலைமையில் இருந்து அறிவிப்பு செய்த பின்பு மாநில தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். 


பிரதமர் நரேந்திர மோடி பொறுப்புக்கு வந்த பின்பு ஒரு மீனவர் மட்டுமே உயிரிழந்தார் என்பதைச் சுட்டிக் காட்டிய எச். ராஜா, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தார். அகில இந்திய தலைமை முடிவுக்கு ஏற்ப தேர்தலில் போட்டியிடுவதைப் பற்றி முடிவு செய்வதாக அவர் தெரிவித்தார்.


மேலும், சிஏஏ சட்டத்தை பொறுத்தவரை பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான்,வங்காளதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மதம் மாற்றம் செய்ய நிர்ப்பந்தம் செய்ப்பட்டதால், இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு மட்டுமே தான் சிஏஏ சட்டம் என்று தெரிவித்தார். வாக்குபதிவு இயந்திரத்தில் யாராலும் குளறுபடிகள் செய்ய முடியாது, இதனை தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்தி உள்ளதாக எச் ராஜா தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க - CAA Act : இந்திய முஸ்லிம்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் பாதிப்பு வருமா? சிஏஏ பற்றி முழு விவரம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ