"மதச்சார்பின்மை என்பது அரசாங்கத்திற்கு எந்த மதமும் இல்லை, மதத்தில் அரசாங்கத்தின் தலையீடும் எதுவும் இல்லை என்பது பொருள், பின்னர் கோயில்களை ஏன் அரசாங்கங்கள் நிர்வகிக்க வேண்டும். விமான நிறுவனங்களையும் ஹோட்டல்களையும் லாபகரமாக  நடத்த முடியாத அரசுகள் கோவில்களை ஏன் நடத்த வேண்டும்" என்று ஈஷா அறக்கட்டளையின் (Isha Foundation) நிறுவனர் சத்குரு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் நடிகர் சந்தனத்துடன் நடத்திய உரையாடலில், பழங்கால,  கோயில்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுவதைப் பற்றி சிந்திக்குமாறு சத்குரு தமிழ் மக்களை கேட்டுக்கொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாடு அரசின் இந்து அறநிலைய துறை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை மேற்கோள் காட்டி, 11,999 கோயில்களுக்கு தினசரி ஒரு பூஜை செய்ய கூடிய அளவில் கூட வருவாய் இல்லை என்று சத்குரு ( Sadhguru) கூறினார். அவர் மேலும் கூறுகையில், தமிழ்நாட்டில் அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள 44,121 கோயில்களில், 37,000 க்கும் அதிகமான கோவில்களுக்கு நிதி கிடைக்கவில்லை என்றார். 


34,093 கோயில்களில் ஆண்டுக்கு ரூ .10,000 க்கும் குறைவாக  வருமானம் கிடைப்பதால் அவை முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன என்றார்.


கோயில்களை அரசின் கட்டுபாட்டில் இருந்து விடுவிப்பதற்காக தங்கள் ஆதரவைப் பதிவு செய்ய 83000 83000  என்ற எண்ணிற்கு மிஸ்டு கால்  கொடுக்குமாறு தமிழ் மக்களை வலியுறுத்தி சத்குரு ஒரு மிஸ்-கால் பிரச்சாரத்தை தொடங்கினார். 


கோயில்களை பக்த சமூகத்திடம் ஒப்படைக்குமாறு பரிந்துரைத்த சத்குரு, சாதி, இன வேறுபாடு ஏதும் இல்லாமல் உண்மையான பக்தர்களுக்கு கோயில்களில் அர்ச்சகரகா பூசாரிகளாக பயிற்சி அளிக்க வேண்டும் என்றார். கோயில்கள் அரசு ஊழியர்களில் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தினால், விக்கிரக திருட்டு மற்றும் தவறான நிர்வாகத்திற்கு வழிவகுத்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.


நீண்டகால திட்டத்தின் அடிப்படையில், அமைக்கப்படும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் 20-25 பக்தர்கள் கொண்ட ஒரு மேற்பார்வைக் குழுவை அமைத்து பணியாற்றுவதன் மூலம் ஒரு விரிவான சமூகம் சார்ந்த தீர்வை உருவாக்க முடியும் என்று அவர் வலியுறுத்தினார். 


ALSO READ | கோவில் என்பது தமிழர்களுக்கு ஆன்மாவை போன்றது – கோவில்களுக்காக குரல் கொடுக்கும் சத்குரு


தேர்தல் வர இருக்கும் சமயத்தில் இந்த பிரச்சாரத்தை எடுத்து செல்வது குறித்து கேட்கையில், மக்கள் தங்கள் எதிர்பார்ப்புகளை அரசியல் கட்சிகளுக்கு தெரிவிக்க வேண்டிய நேரம் இது தான் என்று அவர் கூறினார். "தேர்தலுக்கு முன்னர், ஒவ்வொரு குடிமகனும் நாட்டில் என்ன நடக்கிறது, தனது எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை வெளிப்படுத்த வேண்டும். 


நாங்கள் அதைச் செய்யாவிட்டால், நாம் ஜனநாயகத்திற்கு தகுதியற்றவர்கள். தேர்தலுக்கு முன்பு நாங்கள் எதுவும் சொல்லவில்லை, ஆனால், அது நடந்தபின் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்” என்று அவர் நியாயப்படுத்தினார்.


மாநிலத்தில் பல கோயில்களை மோசமான நிலையில் பார்த்த நிலையில், இந்த முயற்சிக்கு ஆதரவை வழங்கியதாக நடிகர் சந்தனம் மேலும் தெரிவித்தார். “திரைப்பட படப்பிடிப்புகளுக்கான எனது பயணங்களின் போது, ​​நான் கவனித்த வரையில், முக்கிய கோயில்கள் மட்டுமே மிகவும் சிறப்பாக பராமரிக்கப்படுவதை நான் கவனித்தேன், ஆனால் சிறிய கோயில்களில் அப்படி இல்லை. சில சந்தர்ப்பங்களில் கோயில்களுக்கு உதவ சில நன்கொடைகளையும் வழங்கியுள்ளேன் ” என அவர் மேலும் கூறினார். கோயில்களைப் பராமரிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்வது போதாது என்றார்.


இந்த மாத தொடக்கத்தில், சத்குரு தமிழக முதல்வர் கே.பழனிசாமி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எம்.கே.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். கோயில்கள் விவகாரத்தில் “அவர்களின் நோக்கங்களையும் திட்டங்களையும்”  தங்களது கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.


ALSO READ | Temples: கோவில்களை பக்தர்களிடம் ஒப்படைக்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேருங்கள்- சத்குரு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR