சென்னை: வரும் 31 ஆம் தேதியுடன் தமிழகத்தில் பொதுமுடக்கம் முடிவடைய உள்ள நிலையில், மேலும் மாநிலத்தில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது மற்றும் என்னென்ன சேவைகளை மீண்டும் தொடங்கலாம் என்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ குழுவுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) ஆலோசனை நடத்த உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக அரசின் ஊரடங்கு உத்தரவு, வரும் 31ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.


அரசு பள்ளிகளில் செப்டம்பர் மாதம் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும். அதேபோல நீட் தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி குறித்து முதல்வர் பழனிசாமி விரைவில் அறிவிப்பார் என பள்ளி கல்வித்துரை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.