TNEB, Senthil Balaji Latest News | தமிழ்நாட்டில் மிகப்பெரிய துறையான மின்வாரியத்தில் இப்போது 33 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதனை உடனடியாக நிரப்ப அமைச்சர் செந்தில் பாலாஜி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூடவே சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்றும் தங்களது கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். இந்த இரண்டு முக்கியமான கோரிக்கைகளுக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி கிரீன் சிக்னல் கொடுத்தால் மின்வாரிய ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் தான். அதேபோல், அரசு பணிக்காக ஆண்டுக்கணக்கில் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கும் காலி பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பவு வெளியானால் டபுள் ஹேப்பி தான். இந்த ஹேப்பி நியூஸ் குறித்த அறிவிப்பு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இருந்து எப்போது வெளியாகும் என்பது தான்  மின்வாரிய ஊழியர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மாநாட்டிற்கு முன்பு தொண்டர்களுக்கு விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!


தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களின் மத்திய அமைப்பு (COTEE), இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மனு கொடுத்திருக்கின்றனர். அந்த மனுவில், மின்வாரியத்தில் கள உதவியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 33 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரிய காலியிடங்கள் காரணமாக, ஊழியர்கள் பணிபுரியும் போது விபத்துக்களால் தங்கள் வாழ்க்கையை இழக்கின்றனர். சிலர் விபத்துகளால் உடல் இயலாமைக்கு தள்ளப்படுகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளில், 70-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இறந்துள்ளனர் மற்றும் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் காயமடைந்துள்ளனர், ”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதனால் மின்சாரவாரிய ஊழியர்களின் பாதுகாப்பை மேம்படுத்த மின்சாரத்துறை அமைச்சகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 2007க்குப் பிறகு தற்காலிகப் பணியாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்கப்படவில்லை. 35 வயதைத் தாண்டிய தற்காலிகப் பணியாளர்கள் கேங்மேன் பதவிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை இருப்பதையும் அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனால், மின்சார வாரியம் தற்காலிக பணியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு நிரந்தர வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சாரவாரிய ஊழியர்கள் அமைப்பு அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளது.


மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்குமா?


தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய நிதி நெருக்கடியில் இருக்கிறது. இதில் இருந்து மீள அரசு இப்போது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் 33 ஆயிரம் காலிப் பணியிடங்களை ஒரே நேரத்தில் நிரப்பினால் இன்னும் கூடுதல் நிதி நெருக்கடிக்கு அரசு தள்ளப்படும். எனவே ஒருசில ஆயிரம் வேலை வாய்ப்புகளை மட்டுமே நிரப்ப மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்கும். ஏற்கனவே மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுவதால் அரசு பெரும் நிதி நெருக்கடி சந்தித்துக் கொண்டிருக்கிறது. இந்த விஷயங்களை கருத்தில் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி முடிவெடுப்பார் என தெரிகிறது.


மேலும் படிக்க | மத்திய அரசு வழங்கும் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! விண்ணப்பிப்பது எப்படி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ