கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கருமத்தம்பட்டியிலிருந்து சோமனூர் செல்லும் சாலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டது. இதனை எதிர்த்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதால் அங்கிருந்த டாஸ்மாக் கடை வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே கடை இருந்த இடத்தில் மீண்டும் தற்போது டாஸ்மாக் கடை அமைப்பதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அப்பகுதி மருத்துவமனை,பள்ளிகள்,தேவாலயம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் மதுபான கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, கடை அமைப்பதற்கான பணிகள் நிறைவடைந்து ஒரு சில நாளில் கடை திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் பெண்கள் ஒன்றிணைந்து டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 


பெண்களுக்கு ஆதரவாக பாஜக, அதிமுக, கம்யூனிஸ்ட், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட  கட்சிகளை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுக்கடைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.  


மேலும் படிக்க | 'எல்லாம் கரக்ட்டா பன்னிட்டு மங்கி குல்லா-வ மட்டும் மறந்து விட்டுட்டு வந்துட்டேன்’- MURDER ரிப்போர்ட்!


தேவாலயம், குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் பள்ளிகள் நிறைந்த இடத்தில் மதுபானக்கடை அமைக்கப்பட்டால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும் எனவும், ஏற்கனவே பல கட்ட போராட்டம் நடத்தி மதுக்கடை அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் மதுக்கடை கொண்டுவந்தால் சட்டவிரோத சம்பவங்கள் அதிகமாக நடைபெறும் எனவும் குற்றம் சாட்டிய பெண்கள், எதிர்ப்பை மீறி இப்பகுதியில் மதுக்கடை அமைந்தால் அடித்து உடைக்கப்படும் எனவும் ஆவேசமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். 


மேலும் படிக்க | காஞ்சிபுரம்: +2 மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - கோயில் பூசாரி போக்சோ சட்டத்தில் கைது


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYe