இந்திய விண்வெளி ஆய்வுகளை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருகின்றன என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விண்வெளி துறையில் இந்தியா மேற்கொள்ளும் ஆய்வுகளை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருவதாக ISRO முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.


சென்னை MRC நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷரம் பள்ளியில், ‘பாதுகாப்பை நோக்கி’ என்ற தலைப்பில் நடைபெறும் கண்காட்சியை, ISRO முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தொடங்கிவைத்தார்.


இந்த கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்த மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்ட அவர், அவற்றின் விளக்கங்களையும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.


இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சந்திராயன் ஒன்று மூலமாக, நிலவின் தென் பகுதியில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ள நிலையில், மனிதர்கள் நிலவில் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சந்திராயன் 2 ஆராய்ச்சி மேற்கொள்ளும் என தெரிவித்தார். மேலும் விண்வெளி துறையில் இந்தியா மேற்கொள்ளும் ஆய்வுகளை உலக நாடுகள் கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.