YouTuber TTF Vasan Arrest: பைக் ரேஸரும்,  பிரபல யூ டியூபருமான டிடிஎஃப் வாசன் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். இந்தமுறையும் அவர் மீது வழக்கு பாய்ந்தது. செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக அவர் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டார்.  இதனையடுத்து இந்த வழக்கு சம்பந்தமாக மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் அவர் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது நீதிமன்றத்திற்கு செல்லும் வழியில், என் மீது பொய் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது, சட்டம் அனைவருக்கும் சமமானதுதா ன், நீதித்துறையை நம்பியுள்ளேன், எனக்கான நீதி கிடைக்கனும். வீதிக்கு வீதி மதுபான கடைகள் இருக்கு. என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கிறது. அதனால் கெட்டுபோகவில்லையா? பின்புலம் இல்லாமல் வளரும் இளைஞரை இப்படிதான் முடக்குவீர்களா? என மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் டிடிஎஃப் வாசன் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


டிடிஎஃப் வாசன் 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம தடை


பைக் ரேஸரான. டிடிஎஃப் வாசனுக்கு வழக்கு ஒன்றில் 10 ஆண்டுகள் பைக் ஓட்டுவதற்கு நீதிமன்றம தடை விதித்துள்ளது. இந்நிலையில் டிடிஎஃப் வாசன் தனது கார் மூலமாக ஊர் ஊராக சுற்றி வருகிறார். அதனை கார் ஓட்டியபடி வீடியோவாக பதிவு செய்துவருகிறார்.


டிடிஎஃப் வாசனுக்கு எதிராக புகார்


இந்நிலையில் , கடந்த 15 ஆம் தேதி இரவு 7.50 மணிக்கு வண்டியூர் டோல்கேட் பகுதியில் TN 40 AD 1101 என்ற காரை  அஜாக்கிரதையாகவும் கவன குறைவாகவும் பொது மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக செல்போனில் பேசி கொண்டே ஓட்டுவதும் அச்செயலை காரின் டேஸ்போர்டு கேமராவில் பதிவு செய்து Twin Throttlers என்ற ID ல் YOUTUBE சேனலில் பதவிட்டுள்ளதாக மதுரை மாநகர ஆயுதப்படை சார்பு ஆய்வாளரான சமூக ஊடகப்பிரிவு கண்காணிப்பு அலுவலருமான மணிபாரதி என்பவர் புகார் அளித்தார்.


டிடிஎஃப் வாசன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு


அவரின் புகாரின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் பைக்ரேஸரான டிடிஎஃப் வாசன் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இது தொடர்பான விசாரணைக்காக சென்னையிலிருந்து டிடிஎஃப்  வாசன் கைது செய்யப்பட்டு மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 


இதனையடுத்து மரணத்தை  விளைவிக்கும் வகையில் பிறருக்கு மரணம் உண்டாகும் என்ற தெளிவுடன் ஒரு வாகனத்தை இயக்கியதாக 308 பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


மேலும் படிக்க - மீண்டும் சிறை செல்லும் டிடிஎப் வாசன்? பிணையில் வரமுடியாத படி வழக்கு!


மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிஎஃப் வாசன்


ஏற்கனவே பைக் ஓட்டுவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் போது காரில் பேசியபடி ஆபத்தை விளைவிக்கும் வகையில் காரை இயக்கியதாக டிடிஎஃப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அண்ணாநகர் காவல்துறையினரால் டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.


இதன் பின்னர் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு ஆஜர் படுத்துவதற்காக அண்ணாநகர் காவல் நிலையத்தில் இருந்து காவல் துறையினர் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார். 


என் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு போடப்பட்டுள்ளது -டிடிஎப் வாசன்


அப்போது காவல்நிலையத்தின் முன்பாக பேசிய டிடிஎப் வாசன், நான் யாருடைய உயிருக்கு பங்கம் விளைவித்தேன், தன் மீது வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. போதையில் காரை ஒட்டி இரண்டு பேரை கொன்றவர்க்கு பெயில் எனக்கு வழக்கா? சட்டம் என்பது எல்லோருக்குமானது தான், ஆனால் சாலையில் மதுபோதையில் செல்பவர்கள் மீது நடவடிக்கைகள் இல்லை. என் மீது மட்டும் போனில் அவுட் ஸ்பீக்கரில் பேசியபோதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. 


நீதித்துறையை நம்பியுள்ளேன், எனக்கான நீதி கிடைக்கும் -டிடிஎப் வாசன்


நான் நீதித்துறையை நம்பியுள்ளேன், எனக்கான நீதி எனக்கு கிடைக்கனும் என முழக்கமிட்டார். இதேபோன்று நீதிமன்ற வளாகத்தில் சென்றபோது என்னைப் பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? எனவும் வீதிக்கு ஒரு டாஸ்மாக் உள்ளது தெரியாதா எனவும் முழக்கமிட்டபடி சென்றார்.


மேலும் படிக்க - பைக்குக்கும் பெயில் போடுகிறேன் என டிடிஎஃப் வாசன் ஆவேசம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ