99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம்!
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது.
இந்த சூரிய கிரகணம் 99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றுகிறது. அப்போது சூரியனை சந்திரன் முழுவதும் மறைத்து 3 நி.மி., வரை கிரகணம் ஏற்படும். இந்த தகவலை ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும்.
இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். இந்நிலையில் முழு சூரிய கிரகணம் வருகிற ஆகஸ்டு 21-ம தேதி தோன்றுகிறது.
மேலும் இச்சூரிய கிரகணத்தை உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்களால் பார்க்க முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.