போலி வங்கி அழைப்புகள் மூலம் ரூ.5 கோடி கொள்ளை; 30 பேர் கைது!
2000 பேரை ஏமாற்றி சுமார் 5 கோடி ரூபாய் கொள்ளை அடித்ததாக 30 பேர் கொண்ட குழுவை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது!
2000 பேரை ஏமாற்றி சுமார் 5 கோடி ரூபாய் கொள்ளை அடித்ததாக 30 பேர் கொண்ட குழுவை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது!
SBI வங்கியின் பற்று அட்டையினை பயன்படுத்துவர்களை தொலைப்பேசி வாயிலாக அழைத்து, அவர்களை ஏமாற்றி நூதன முறையில் பணத்தை கொள்ளை அடித்ததாக டெல்லியின் சிந்திராபாத் பகுதியில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 22 டெலிகாலர்கள் அடங்குவர் என சிந்திராபாத் காவல்துறை ஆணையர் VC சாஜ்நர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக விஜய் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த குழு பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு அவர்களுக்கு வங்கி மூலம் சலுகைகள், கடண் வழங்குவதாக கூறி அவர்களின் பரிவர்தனை அட்டையின் விவரங்களைப் பெற்று பின்னர் அந்த விவரங்களைப் பயன்படுத்தி அவர்களின் கணக்கில் இருந்தே பணத்தை திருடியுள்ளனர்.
இந்த நூதன திருட்டிற்கு குறிப்பிட்ட கால்சென்டர் உதவிப் பெற்று, அங்கு பணிப்புரிவர்களின் உதவியோடு திருட்டினை நடத்தியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என VC சாஜ்நர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்களை, இந்த திருடர்கள் குழ (www.jayyshree.com ) என்னும் வலைதளத்தில் உள்ளிட கோரியுள்ளது. சூழ்ச்சி வலையை அறியாத வாடிக்கையாளர்கள் அவர்களது விவரங்களையும் (OTP உள்பட) இந்த இணையதளத்தில் பதிவேற்றியுள்ளனர். இந்த தகவல்களின் உதவியோடு திருட்டு அரங்கேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த குற்றத்தில் ஈடுப்பட்ட அனைவரையும் கடந்த 8-ஆம் தேதி கைது செய்த காவல்துறை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளது. இவர்களின் மீதான விசாரணை வரும் ஜூலை 23-ஆம் நாள் நிகழும் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளனர்.