50 ஆண்டுகள் வரை தாங்கும் பேட்டரி கண்டுபிடிப்பு... சார்ஜ் செய்யவே வேண்டாம் - அது எப்படி?
50 Year Long Lasting Battery: சுமார் 50 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும் ஒரு புதிய பேட்டரி ஒன்றை சீன நிறுவனம் தயாரித்துள்ளது, இது புதிய புரட்சி ஏற்படுத்தவல்லது.
50 Year Long Lasting Battery: சீனாவில் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் சார்ஜ் செய்யவோ அல்லது செலவு செய்து பராமரிக்கவோ அவசியமே இல்லாத சுமார் 50 ஆண்டுகள் வரை நீடித்து உழைக்கும் ஒரு புதிய பேட்டரியை உருவாக்கியுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சீன அச்சு ஊடகம் ஒன்றில் வெளியான தகவல்களின்படி, இது தலைநகர் பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட பீட்டாவோல்ட் நிறுவனம் உருவாக்கிய அணுசக்தி பேட்டரி என தெரிவிக்கப்படுகிறது. மேலும் "அணு" என்ற வார்த்தையைப் படித்த பிறகு ஒரு பெரிய அளவை கற்பனை செய்ய வேண்டாம், சிறிய அளவிலான பேட்டரியாகும்.
63 ஐசோடோப்புகளை ஒன்றாக்கி இணைத்து ஒரு நாணயத்தை விட சிறியதாக இருக்கும் அளவிற்கு பேட்டரியை வடிவமைத்துள்ளது. அணு ஆற்றலின் மூலம் மிலிமலைசேஷனில் உருவாக்கப்பட்டு உலகின் முதல் பேட்டர் இது என்றும் அந்த சீன நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்த பேட்டரியின் அடுத்த தலைமுறை வகையினம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. இதன்மூலம், ஃபோன்கள், ட்ரோன்கள் போன்ற வணிக பயன்பாட்டுக்கு இதை கொண்டுவர அதிகளவில் தயாரிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.
மிக சிறிய பேட்டரி
அந்நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பில்"பீட்டாவோல்ட் அணு ஆற்றல் பேட்டரிகள் விண்வெளி, AI உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள், நுண்செயலிகள், மேம்பட்ட டிடெக்டர்கள், சிறிய ட்ரோன்கள் மற்றும் மைக்ரோ-ரோபோட்கள் போன்ற பல சூழ்நிலைகளில் நீண்டகால மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இந்த புதிய ஆற்றல் கண்டுபிடிப்பு, AI தொழில்நுட்ப புரட்சியில் சீனா முன்னணி பெற உதவும்" என்று குறிப்பிட்டுள்ளது.
இது 15 x 15 x 5 மில்லிமீட்டர்கள் மற்றும் ஃபியூச்சரிசத்தின் படி அணுக்கரு ஐசோடோப்புகள் மற்றும் வைர குறைக்கடத்திகளின் செதில்-மெல்லிய அடுக்குகளால் ஆனது. அணுக்கரு பேட்டரி தற்போது 3 வோல்ட்டில் 100 மைக்ரோவாட் சக்தியை உருவாக்குகிறது. இருப்பினும், 2025-க்குள் 1-வாட் மின் உற்பத்தியை எட்டுவது இலக்கு. பீட்டாவோல்ட், கதிர்வீச்சு மனித உடலுக்கு எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது, இதயமுடுக்கி போன்ற மருத்துவ சாதனங்களில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எப்படி வேலை செய்கிறது?
பேட்டரியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமானது, 20ஆம் நூற்றாண்டில் முதன்முதலில் ஆராயப்பட்ட, சிதைந்து வரும் ஐசோடோப்புகளில் இருந்து ஆற்றலை வெளியிடுகிறது. பின்னர் இந்த ஆற்றலை மின்சாரமாக மாற்றுகிறது. சீனா தனது 14வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் 2021-2025 வரை அணு மின்கலங்களை மினியேட்டரைஸ் செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது.
பேட்டரி ஒரு அடுக்கு வடிவமைப்பைக் கொண்டுள்ளது, இது திடீர் சக்தியால் தீப்பிடிப்பதையோ அல்லது வெடிப்பதையோ தடுக்கும். -60 டிகிரி செல்சியஸ் முதல் 120 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பநிலையில் பேட்டரி வேலை செய்யும் திறன் கொண்டது என்றும் பீட்டாவோல்ட் கூறியுள்ளது.
"அணு ஆற்றல் பேட்டரிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. சிதைவு காலத்திற்குப் பிறகு, 63 ஐசோடோப்புகள் தாமிரத்தின் நிலையான ஐசோடோப்பாக மாறும். இது கதிரியக்கமற்றது மற்றும் சுற்றுச்சூழலுக்கு எந்த அச்சுறுத்தலையும் மாசுபாட்டையும் ஏற்படுத்தாது. சோதனையை முடித்து தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்ற பிறகு பேட்டரியின் கமர்ஷியல் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ரூ 151 ரீசார்ஜ் பிளான்.. ஓவரா ஆஃபரை அள்ளிக்கொட்டிய பிஎஸ்என்எல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ