Aadhar Card Photo Change: ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.  இந்த ஆவணத்தில் ஒரு நபரின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் உள்ளது. வருமான வரியை தாக்கல் செய்தல், பல்வேறு வகையான படிவங்களை நிரப்புதல், விமான பயணம் உள்ளிட்ட பல சந்தர்ப்பங்களில் இந்த ஆவணம் பொதுவாக அடையாளச் சான்றாகப் பயன்படுத்தப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் ஆதார் அட்டையில் (Aadhaar Cardபுகைப்படத்தை மாற்ற UIDAI ஆஃப்லைன் சேவையை மட்டுமே வழங்குகிறது. புகைப்பட மாற்றங்களுக்காக ஒவ்வொருவரும் அருகிலுள்ள ஆதார் மையத்தைப் பார்வையிட வேண்டும். இது தவிர, தபால் மூலம் விண்ணப்பம் செய்யலாம். எனவே பல ஆண்டுகளுக்கு முன் எடுத்த ஆதார் அட்டையில் உங்கள் படம் மிகவும் பழைய படமாக இருந்து, அதனை மாற்ற வேண்டும் என நினைத்தால், அதனை கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி எளிதாக மாற்றலாம்:


ALSO READ | ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட எண்ணை மறந்து விட்டீர்களா.. கவலை வேண்டாம்...!!


1: அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையம் அல்லது ஆதார் சேவா மையத்திற்கு செல்லவும்
2: UIDAI இணையதளமான https://uidai.gov.in/ என்ற வலைதளத்திற்கு செல்லுங்கள். ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கவும் (திருத்தம் படிவம் / புதுப்பிப்பு படிவம்)
3: படிவத்தை நிரப்பவும். படிவத்தை அருகிலுள்ள ஆதார் சேர்க்கை மையத்தில் சமர்ப்பித்து உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை வழங்கவும்
4: அங்குள்ள நிர்வாகி உங்களை புகைப்படம் எடுப்பார்
5: இப்போது புதிய புகைப்படத்தை உங்கள் ஆதார் அட்டையில் புதுப்பிப்பார்கள். உங்களிடம் ரூ .25 + ஜிஎஸ்டி என்ற அளவில் கட்டணம் வசூலிக்கப்படும்
6: புதுப்பிப்பு கோரிக்கை எண் (Update Request Number-URN) கொண்ட ஒப்புதல் சீட்டு உங்களுக்கு வழங்கப்படும்
7: புகைப்படம் புதுப்பிக்கப்பட்டதா என்பதைச் சரிபார்க்க URN  எண்ணை பயன்படுத்தி தகவலை பெறலாம்.


நீங்கள் ஆதார் சேவா கேந்திரத்திற்கு செல்ல விரும்பவில்லை என்றால்…
1: முதலில், நீங்கள் UIDAI இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.
2: ஆதார் அட்டை புதுப்பிப்பு திருத்தும் படிவத்தை இங்கிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். 
3: பின்னர் அனைத்து தகவல்களும் படிவத்தில் நிரப்பப்பட வேண்டும்.
4: படிவத்தை பூர்த்தி செய்த பிறகு, ஆதார் அட்டை புதுப்பிப்புக்காக UIDAI பிராந்திய அலுவலகம் என்ற பெயரில் ஒரு கடிதம் எழுதப்பட்டு பின்னர் சுய சான்றளிக்கப்பட்ட படத்தை இணைத்து இடுகையிடவும்.
5: இது நடந்த இரண்டு வாரங்களுக்குள் புதிய புகைப்படங்களுடன் ஆதார் அட்டை கிடைக்கும்.


ALSO READ | WhatsApp புதிய தனியுரிமைக் கொள்கையை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும்: மத்திய அரசு


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR