ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் புட்பால் கேஷ்பேக் சலுகையை வழங்கி கொண்டிருக்கும் நிலையில் ஏர்டெல் தனது மேரா பெலா ஸ்மார்ட்போன் வாய்ப்பை, நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்துடன் இணைந்து விரிவுபடுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏர்டெல் நிறுவனமானது, எச்எம்டி க்ளோபல் நிறுவனத்தின் ஆரம்பகட்ட வெளியீடுகளான நோக்கியா 2 மற்றும் நோக்கியா 3 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.2000/- என்கிற கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பின் கீழ், நோக்கியா 2 ஸ்மார்ட்போனை ரூ.6,999/-க்கு பதிலாக ரூ.4,999/-க்கும் மற்றும் நோக்கியா 3 ஸ்மார்ட்போனை ரூ.9,499/-க்கு பதிலாக ரூ.7,499/-க்கும் வாங்கலாம். 


இந்த கேஷ்பேக் சலுகையானதும் உடனடியாக கிடைக்காது. மாறாக கேஷ்பேக்கை பெற மொத்தம் 36 மாதங்களுக்கு ரிச்சார்ஜ் செய்ய வேண்டும். அந்த 36 மாதங்களில் இரண்டு தவணைகளில் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,000 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும். இரண்டாம் தவணையின் கீழ் ரூ.1500/- கேஷ்பேக் அதாவது ஒரு வாடிக்கையாளர் ரூ.500/- என்கிற முதல தவணை கேஷ்பேக்கை பெற முதல் 18 மாதங்களுக்கு ரூ,3500/- மதிப்பிலான ரீசார்ஜ்களை செய்ய வேண்டும் அதே போல அடுத்த 18 மாதங்களில் ரூ.3,500/- மதிப்பிலான ரீசார்ஜ் செய்ய இரண்டாம் தவணையின் கீழ் ரூ.1500/- கேஷ்பேக் கிடைக்கும்.