நியூ டெல்லி:  டெல்லி -யை சேர்ந்த நிதின் சேதி என்பவர் ஏர்டெல் நிறுவனத்திடம் இருந்து ரூபாய் 1,86,543 பில் தொகையாக பெற்றது ஏர்டெல் வாடிகையாலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிதின் சேதி சமிபத்தில் துபாய் சென்றபொது தனது ஏர்டெல் எண்ணுக்கு ரோமிங் சேவையினை 10 நாட்களுக்கு தற்காலிகமாக இயக்கியுள்ளார். ஆனால் அவர் இந்திய திரும்பிய பிறகும் அந்த ரோமிங் சேவை தொடர்ந்ததால் அவருக்கு ரூ. 1,86,543 பில் கட்டவேண்டும் என செய்தி வந்துள்ளது.



இதுகுறித்து நிதின் ஏர்டெல் சேவை மையத்தை அணுகியபோது சரியான பதில் கிடைக்காததால் இந்த விஷயத்தினை சமூக ஊடகங்களின் பார்வைக்கு கொண்டு வந்தார். அதன் பின்னர் ஏர்டெல் நிறுவனம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த கட்டணம் வந்துள்ளதகவும், தங்கள் தரப்பில் இருந்து இந்த பிரச்சனைக்கு சரியான முடிவு எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளது