வியப்பு; இப்படி ஒரு Speaker-யை நீங்கள் பார்த்ததுண்டா?
பிரபல மின்பொரும் உற்பத்தி நிறுவனமான Aisen, ட்ராலி வகையிலான புதுவகை ஸ்பீகர்களை அறிமுகம் செய்துள்ளது!
பிரபல மின்பொரும் உற்பத்தி நிறுவனமான Aisen, ட்ராலி வகையிலான புதுவகை ஸ்பீகர்களை அறிமுகம் செய்துள்ளது!
Aisen நிறுவனம் தனது புதுவரவான A12UKB800(Trolley Speaker) -னை அறிமுகம் செய்துள்ளது. 10" மற்றும் 6.5" என இரண்டு சிறு ஒலிபெருக்கிகளை கொண்டு வெளியாகியுள்ள இந்த Trolley Speaker இசை பிரியர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.
மொபைல் போன்களுடன் இணைத்து இசைக்கூடிய இந்த Trolley Speaker துள்ளிய சப்தங்களை வெளிப்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 5 மணி நேரத்திற்கு தாங்கக்கூடிய மின்களத்துடன் வரும் இந்த ஒலிபெருக்கி, வீட்டில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
கண்கவர் அமைப்பில் உள்ள இந்த ஸ்பீகர்கள், பொருட்களை எடுத்துச் செல்லும் ட்ராலி வடிவில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் அமைப்பினை மேலும் சிறப்பிக்க LED திரையும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பீகர்களானது வையர்கள் (அ) ப்ளூடூத் ஆகிய இரண்டிலும் பயண்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் USB, SD & MMC slot ஆகியவையும் இணைக்கப்பட்டுள்ளது.
வேல்யு பிளஸ், சோனி விற்பனை நிலையங்களில் கிடைக்கு இந்த ஸ்பீகர் ஆனது ஆன்லைன் விற்பனை தளங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்னைகவரும் இந்த Trolley Speaker - A12UKB800 ஆனது Rs 12,499-க்கு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது!