புதுடெல்லி: தொலைபேசியில் நல்ல கேமராவை பலர் தேடுகிறார்கள். அந்தவகையில் தற்போது இந்தியாவில் மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்களாக மோட்டோ ஜி 60 அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த ஸ்மார்ட்போன் (Smartphone) பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி மற்றும் 6,000 எம்ஏஎச் பேட்டரிகளைக் கொண்டுள்ளன. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வீகிதத்துடன் 6.8 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டுள்ளது.


ALSO READ | Flipkart Mobile Bonanza Sale: Redmi Note 9-ஐ மிகக்குறைந்த விலையில் வாங்க வாய்ப்பு


வேறுபாடுகளைப் பொறுத்தவரை மோட்டோ ஜி 60 ஸ்மார்ட்போன் (Moto G60) அதன் பின்புறத்தில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமராவைக் கொண்டுள்ளது. இந்தியாவில் அறிமுகமான மோட்டோ ஜி 60 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும். இது டைனமிக் கிரே மற்றும் ஃப்ரோஸ்டட் ஷாம்பெயின் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும்.


மோட்டோ ஜி60 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:
- டூயல் சிம் (நானோ)
- எச்டிஆர் 10 ஆதரவு
- 6.8 அங்குல புல் எச்டி + டிஸ்ப்ளே
- ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்
- ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732 ஜி எஸ்ஓசி
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஹைப்ரிட் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக (1TB வரை) மெமரி நீட்டிப்பு
- 108MP முதன்மை சென்சார் (எஃப் / 1.7 லென்ஸ்)
- 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் (118 டிகிரி பீல்ட் ஆப் வியூ, எஃப் / 2.2 லென்ஸ்)
- எஃப் / 2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
- எல்இடி ஃபிளாஷ் ஆதரவு
- 32MP செல்பீ கேமரா (எஃப் / 2.2 லென்ஸ்)
- டர்போபவர் 20 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 6,000 எம்ஏஎச் பேட்டரி
- ப்ளூடூத் 5.0, 3.5 மிமீ ஆடியோ ஜாக், வைஃபை 802.11 ஏசி, என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
- பின்புற கைரேகை சென்சார்


ALSO READ | Motorola Defy அட்டகாச அறிமுகம்: கீழே போட்டாலும், நீரில் விழுந்தாலும் ஒன்றும் ஆகாது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR