ஸ்டார்ட்அப் நிறுவனமான ப்யூர் ஈ.வி (Pure EV) டிசம்பரில் ஒரு அற்புதமான ஸ்கூட்டரை லாஞ்ச் செய்யவுள்ளது. இதன் சிறப்பம்சம் இதன் வேகமாகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் எட்ரான்ஸ் நியோ (Etrance Neo) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஷோரூம் விலை ரூ .75,999 ஆக இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, Pure EV தனது புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலான 'ஈட்ரான்ஸ் பிளஸ்' (ETrance+) ஐ அறிமுகப்படுத்தியது. இதன் ஷோரூம் விலை ரூ .56,999 ஆகும்.


இந்த ஸ்டார்டப் நிறுவனத்தை (Startup Company) ஹைதராபாத் இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT Hyderabad) உருவாக்கியது. நிறுவனத்தின் படி இது அதன் 5 வது தயாரிப்பாகும். இது 1.25 கிலோவாட் போர்ட்டபிள் பேட்டரி கொண்டுள்ளது. Pure EV என்பது ஐ.ஐ.டி-ஹைதராபாத்தின் ஸ்டார்ட் அப் ஆன ப்யூர் எனர்ஜியின் மின்சார வாகன அலகாகும்ம்.


இதன் வேகம் எப்படி இருக்கும்


ETrance Neo-வால் ஐந்து வினாடிகளில் 40 கி.மீ வேகத்தை எட்ட முடியும். இது 2,500 WH இன் பேடண்ட் பெற்ற பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த இ-ஸ்கூட்டர் ஒரு முறை சார்ஜ் செய்தால் 120 கி.மீ செல்லும்.


ALSO READ: Tech trick: இலவச Wi-Fi இணைப்பை பயமின்றி பயன்படுத்த இந்த trick உங்களுக்கு உதவும்


டிசம்பரில் சந்தையில் வரும்


இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி-ஹைதராபாத் (IIT Hyderabad) ஆதரவுடன் இயங்கும் Pure EV-யின் படி, இந்த புதிய மாடலில் வேகமான பிக் அப்பின் வசதி இருக்கும். நிறுவனம் இதை டிசம்பர் 1, 2020 அன்று சந்தையில் அறிமுகப்படுத்த உள்ளது.


பேடண்ட் பேட்டரி


இந்த மாடலில் காப்புரிமை பெற்ற பேட்டரி நிறுவப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. Pure EV-யின் தலைமை நிர்வாக அதிகாரி ரோஹித் வதேராவின் கூற்றுப்படி, புதிய மாடலில் சிறந்த ஏரோடைனமிக்ஸ் இடம்பெற்றுள்ளது. இது பவர்டிரெயினின் செயல்திறனை மேம்படுத்தும். கூடுதலாக, இந்த வாகனத்தால் அதிக வேகத்தை பெறவும் நீண்ட நேரம் பயணிக்கவும் முடியும்.


நிறுவனம் 10 ஆயிரம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும்


இந்த மாடல் குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலின் 10,000 யூனிட்களை முதல் ஆண்டில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த மாடல் ஹைதராபாத்தில் (Hyderabad) கிடைக்கும் என்று வதேரா கூறினார். இது டிசம்பர் முதல் நாடு முழுவதும் கிடைக்கும்.


ETrance + இல் பேட்டரி


ETrance + என்பது நிறுவனத்தின் 5 வது தயாரிப்பு ஆகும். இது 1.25 கிலோவாட் போர்ட்டபிள் பேட்டரி கொண்டுள்ளது. Pure EV என்பது ஐ.ஐ.டி-ஹைதராபாத்தின் ஸ்டார்ட் அப்பான ப்யூர் எனர்ஜியின் மின்சார வாகன அலகாகும்.


ALSO READ: உங்கள் Smartphone-க்கு ஆபத்து: இந்த Whatsapp settings-சை உடனே மாற்றவும்!!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR