ஆப்பிள் உலகின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் முன்னணியில் உள்ளது. ஆப்பிள் ஒவ்வொரு ஆண்டும் அதன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் புதிய மாடலை அறிமுகப்படுத்துகிறது. அனைவருக்கும் ஆப்பிள் போன்களை வாங்க ஆசை இருந்தாலும், அதன் அதிகப்படியான விலை காரணமாக அனைவராலும் அவற்றை வாங்க முடிவதில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் சமீபத்திய iPhone 13 ஐ முந்தைய மாடலான iPhone 12-ன் விலையில் வாங்கக்கூடிய சலுகையைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


iPhone 13 ஐ குறைந்த விலையில் இங்கு வாங்கலாம்


நீங்கள் iPhone 12 இன் விலையில் iPhone 13 ஐ வாங்க விரும்பினால், அதை பிளிப்கார்டிலோ (Flipkart) அமேசானிலோ அல்ல, மாறாக IndiaiStore-ல் வாங்க முடியும். ஐபோன் 13 ஐ அதன் சில்லறை விற்பனைக் கடையில் வாங்கினால், வங்கிச் சலுகைகள் மற்றும் பரிமாற்றச் சலுகைகளுடன் உடனடி ஸ்டோர் தள்ளுபடியின் பலனையும் வாடிக்கையாளர்கள் பெறலாம். 


இந்த வகையில் அற்புதமான தள்ளுபடி கிடைக்கும் 


IndiaiStore இன் சில்லறை விற்பனைக் கடையில் இருந்து iPhone 13 ஐ வாங்கினால், உங்களுக்கு 5 ஆயிரம் உடனடி ஸ்டோர் தள்ளுபடி வழங்கப்படும். இது இந்த போனின் விலையை ரூ.79,900 லிருந்து ரூ.74,900 ஆக குறைக்கும். மேலும், ஐசிஐசிஐ அல்லது கோடக் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு அல்லது எஸ்பிஐயின் கிரெடிட் கார்டை கொண்டு இந்த போனை வாங்கினால், மேலும் ரூ.6,000 கேஷ்பேக் கிடைக்கும். அதன் பின்னர் போனின் விலை மேலும் ரூ.68,900 ஆக குறையும்.


ALSO READ | '27,000,000 mAh' உலகிலேயே மிகப்பெரிய பவர்பேங்க் - 5,000 போன், TV, ஃபிரிட்ஜூக்கும் சார்ஜ் செய்யலாம்..!


எக்ஸ்சேஞ்ச் ஆஃபரின் மூலம் அதிரடி தள்ளுபடி 


iPhone 13 இன் இந்த டீலில் ஒரு பரிமாற்றச் சலுகையும் சேர்க்கப்பட்டுள்ளது. ஐபோன் 12 விலையில் ஐபோன் 13 ஐ வாங்க, நீங்கள் ஒரு நல்ல நிலையில் ஐபோன் எக்ஸ்ஆர்-ஐ எக்ஸ்சேஞ்சில் கொடுக்க வேண்டும். அதற்கு பதிலாக உங்களுக்கு 18 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதைத் தொடர்ந்து ஐபோன் 13 இன் விலை 50,900 ரூபாயாகக் குறையும். எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் நீங்கள் மற்ற போன்களையும் பயன்படுத்தலாம். எனினும், அந்த போன்களுக்கு பதிலாக தள்ளுப்டி எவ்வளவு கிடைக்கும் என்பது போனின் நிலையைப் பொறுத்தது.


ஐபோன் 13 இன் அம்சங்கள்


இந்த டீல், A15 பயோனிக் சிப்பில் வேலை செய்யும் iPhone 13 இன் 128GB சேமிப்பு மாறுபாடுக்கானது. 5G சேவைகளுடன் கூடிய இந்த iPhone 13 போன், 6.1-inch Super Retina XDR டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கேமராவைப் பற்றி பேசுகையில், அதன் பின்புற கேமரா அமைப்பில் கொடுக்கப்பட்ட இரண்டு சென்சார்களும் 12MP மற்றும் முன் கேமராவும் 12MP-ஐ கொண்டுள்ளன. இரட்டை சிம் சேவைகள் கொண்ட இந்த போனில், உங்களுக்கு ஒரு வருட பிராண்ட் வாரண்டியும் வழங்கப்படும்.


ALSO READ | Flipkart அதிரடி: ரூ. 75,000 ஸ்மார்ட் டிவி-ஐ வெறும் ரூ. 25,000-க்கு வாங்க சூப்பர் வாய்ப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR