Amazon Blockbuster Value Days: நீங்கள் நீண்ட நாட்களாக இ-காமர்ஸ் அமேசான் தளத்தில் கிடக்கும் பொருட்களை தள்ளுபடி விலையில் வாங்க விரும்பினால், மெகா விற்பனைக்காக காத்துக்கொண்டிருந்தால், இன்று உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. அமேசான் இந்தியா (Amazon India) தளத்தில் பிளாக்பஸ்டர் வேல்யூ டேஸ் (Blockbuster Value Days) விற்பனை இன்று முதல் தொடங்கியுள்ளது. இந்த விற்பனை காலக்கட்டத்தின் போது, ​​ஃபேஷன், எலக்ட்ரானிக்ஸ், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பிற வகைப் பொருட்களை குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பைப் பெறுவீர்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விற்பனை இன்று தொடங்கி ஏப்ரல் 17 ஆம் தேதி வரை நடைபெறும். குறைந்த விலையைத் தவிர, இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் எஸ்பிஐ கிரெடிட் கார்டுகள் மற்றும் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் வாங்கும் போது சிறப்பு 10 சதவீத உடனடி தள்ளுபடியின் பலனையும் வழங்குகிறது.


எந்தெந்த பொருட்களில் எத்தனை சதவீத தள்ளுபடியைப் பெறலாம். நீங்கள் வாங்கும் பொருட்களில் வங்கிச் சலுகைகள் குறித்தும் விவரங்களை அறிந்துக்கொள்ளலாம்.


இந்த பொருட்களுக்கு அதிக தள்ளுபடி: 
பிரத்யேக விற்பனையின் போது, ​​அமேசான் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடியும், பல்வேறு ஸ்மார்ட், 4கே, OLED மற்றும் QLED டிவிகளில் 60 சதவீதம் வரை தள்ளுபடியும் கிடைக்கிறது. இது தவிர, பயனர்களின் வசதிக்காக, நோ-காஸ்ட் மாத தவணை (EMI) விருப்பமும் 12 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில், ஒன்பிளஸ், ரெட்மி, சாம்சங் போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களான பொருட்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்குகின்றனர். பிரபலமான கேமிங் கன்சோல்களில் 25 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். 


மேலும் படிக்க: பாதி விலையில் iPhone 12 Pro Max..! அலைமோதும் வாடிக்கையாளர்கள் - விலை இதோ..!


அமேசானில் இந்த பொருட்களுக்கு மெகா தள்ளுபடி: 
அமேசான் இந்தியா நிறுவனம் அளித்த தகவலின்படி, அமேசான் பிராண்டுகள் மற்றும் பிற தயாரிப்புகளில் பயனர்கள் 70 சதவீதம் வரை தள்ளுபடியைப் பெறலாம். விற்பனையின் போது, ​​ஃபேஷன் வகை, வீட்டுப் பொருட்கள், சமையலறை பொருட்கள் உட்பட பல பொருட்களுக்கு அதிக அளவிலான தள்ளுபடிகள் கிடைக்கும்.


குளிர்சாதனப் பிராண்ட்களுக்கு தள்ளுபடி: 
நீங்கள் சிறந்த குளிர்சாதன பெட்டியை தேடுகிறீர்களா? கீழே கொடுக்கப்பட்டுள்ள பிராண்டுகள் சிறந்ததாக இருக்கும்.


- சாம்சங்
- எல்ஜி
- வோல்டாஸ் 
- கோத்ரேஜ் 
- ஹையர்
-வேர்ல்பூல் 
- எலக்ட்ரோலக்ஸ்
- போஷ்


மேலும் படிக்க: Flipkart Deal: ரூ. 27,999 அசத்தல் ரியல்மீ ஸ்மார்ட்போனை வெறும் ரூ. 999-க்கு வாங்குவது எப்படி?


அமேசான் பிளாக்பஸ்டர் வேல்யூ டேஸ் விற்பனை குறித்த கேள்விகள்: 


1. அமேசான் பிளாக்பஸ்டர் வேல்யூ டேஸ் விற்பனை எப்போது தொடங்குகிறது?
இன்று முதல் (ஏப்ரல் 14) அமேசான் பிளாக்பஸ்டர் வேல்யூ டேஸ் விற்பனை 2023 தொடங்கியது. இந்த மெகா தள்ளுபடி விற்பனை ஏப்ரல் 17 வரை நீடிக்கும்.


2. அமேசான் தளத்தின் மிகப்பெரிய விற்பனை எது?
அமேசான் விற்பனையின் மிகப் பெரிய நிகழ்வுகளில் ஒன்று பிரைம் டே விற்பனை ஆகும். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை இந்தியாவில் மிகப்பெரிய விற்பனை நிகழ்வுகளில் ஒன்றாகும்.


(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கு ஜீ நியூஸ் தமிழ் பொறுப்பாகாது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் அமேசான் நிறுவனத்தின் மாற்றத்திற்கு உட்பட்டவை)


மேலும் படிக்க: OPPO A1: அசத்தலான ஸ்மார்ட்போன் அறிமுகம், குறைந்த விலை, அற்புத அம்சங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ