IPhone 15 Launch Updates: இன்னும் சில மணி நேரமே.. புதிய Apple iPhone 15 அறிமுகம்
iPhone 15 Launch Updates: ஆப்பிள் நிறுவனத்தின் வொண்டர்லஸ்ட் வெளியீட்டு விழா இன்று இரவு 10:30 மணிக்கு தொடங்கும். இதில் ஐபோன் 15 சீரிஸ் மொபைல்கள் வெளியாக உள்ளன.
Apple Event 2023 Updates, iPhone 15 launch: ஆப்பிள் ரசிகர்களின் காத்திருப்பு இன்றுடன் முடிக்கு வருகிறது. ஆம்., ஆப்பிள் தனது ஐபோன் வெளியீட்டு நிகழ்வை இன்று அதாவது செப்டம்பர் 12 ஆம் தேதி (வொண்டர்லஸ்ட் நிகழ்வு) நடத்துகிறது, இதில் iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை அறிமுகப்படுத்தப்படும். வொண்டர்லஸ்ட் நிகழ்வில் அறிமுகப்படுத்துகிறது. ஆப்பிள் வாட்ச் இரண்டு மாடல்களை ஒரே நேரத்தில் வெளியிடப்படும். இதனுடன் Apple AirPods Pro இன் புதிய எடிஷனுக்கு அறிமுகம் செய்யப்படும்.
இந்நிலையில் ஆப்பிள் இன்க் நிறுவனத்தின் “ Wonderlust “ நிகழ்வு இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த நிகழ்வு குறித்த விவரங்கள் மற்றும் நேரலையை எப்படி பார்ப்பது என்பது குறித்த தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.
ஆப்பிள் நிகழ்வை (Apple Event) நேரலையில் எங்கே பார்ப்பது:
ஆப்பிள் நிறுவனம் அதன் அதிகாரபூர்வ இணையதளம் மற்றும் யூட்யூப் ஆகிய தளங்களில் இந்த நிகழ்வை ஒளிபரப்ப இருக்கிறது. மேலும், ஆப்பிள் டிவி செயலி மற்றும் இந்த நிகழ்வை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பிரத்யேகமாக பக்கங்களிலும் இந்த நிகழ்வை பார்க்கலாம்.
இது தவிர, நீங்கள் Zeebiz.com இல் நேரலையில் காண முடியும்.
மேலும் படிக்க | Redmi Note 13: 200MP கேமரா மற்றும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் மொபைல் விவரம்
Apple Event 2023: நான்கு ஐபோன்கள் (iPhone) அறிமுகப்படுத்தப்படும்:
இந்த நிகழ்வில் நிறுவனம் 4 புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தும். இந்த பட்டியலில் iPhone 15, iPhone 15 Plus, iPhone 15 Pro மற்றும் iPhone 15 Pro Max ஆகியவை அடங்கும். மேலும், இதோடு சேர்த்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா ஆகியவையும், ஆப்பிள் ஏர்பாட் ப்ரோவின் புதிய எடிசனும் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபோன் 15 சீரிஸின் ஸ்டாண்டர்ட் மாடல்களான ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடலில் இந்த முறை பெரிய மாற்றங்கள் இடம்பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக, 48 மெகாபிக்ஸல் பிரைமரி கேமரா சென்சார் இடம்பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களிலும் அப்க்ரேடுகள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பெரிஸ்கோப் லென்ஸ் இவற்றில் இடம்பெறலாம். முக்கியமாக A17 பயோனிக் ப்ராசஸர்கள் இதில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்பிள் ஐபோன் 15 ( Iphone 15 ) விலை:
ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் விலை என்னவாக இருக்கும் என்று பார்ப்போம்.
iPhone 15 - 128GB - $799
iPhone 15 - 256GB - $899
iPhone 15 Plus - 128GB - $899
iPhone 15 Plus - 256GB - $999.
இதனிடையே iPhone 15 ப்ரோ மாடல்கள் முந்தைய மாடல்களை விட 100 முதல் 200 டாலர்கள் வரை அதிகமான விலைக்கு விற்பனைக்கு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ