பஜாஜ் ஆட்டோ விலை உயர்வு: வாடிக்கையாளர்கள்ளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், பைக்குகளின் விலையை உயர்த்துவதாக பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது. மிக விரைவில் விலை எந்த அளவுக்கு உயர்த்தப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி மற்றும் டாடா ஆகியவை விலையை உயர்த்துவதாக அறிவித்திருந்தன. விலைவாசி உயர்வு காரணமாக இந்த நடவடிக்கையை எடுக்க நேரிட்டதாக நிறுவனங்கள் கூறுகின்றன.


விற்பனை வீழ்ச்சி


2021 டிசம்பரில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) விற்பனை 3 சதவீதம் சரிந்து 362,470 யூனிட்டுகளாக இருந்தது. ஒரு வருடத்திற்கு முன்பு டிசம்பர் 2020 இல், விற்பனை 3,72,532 அலகுகளாக இருந்தது. அதேசமயம், நவம்பர் 2021 இல் விற்பனை 379,276 அலகுகளாக இருந்தது.


நிறுவன பங்குகளில் ஏற்றம் 


பஜாஜ் நிறுவனம் விலை உயர்வு குறித்த செய்தியை அறிவித்த பிறகு, நிறுவனத்தின் பங்குகள் மீண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பல பங்கு தரகர்களும் இந்த நிறுவனத்தின் பங்குகள் வரும் நாட்களில் முன்னேற்றத்தைக் காணும் என கூறியுள்ளனர். 


ALSO READ | புத்தாண்டில் ஷாக் கொடுத்த கார் நிறுவனங்கள்: இந்த கார்களின் விலைகள் அதிகரித்தன 


நாட்டின் இரண்டு பெரிய வாகன நிறுவனங்களின் விற்பனை


2021 ஆம் ஆண்டில், ஹீரோ மோட்டோகார்ப் மோட்டார்சைக்கிள்களின் மொத்த விற்பனை 2.80 லட்சமாக இருந்தது. 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 71 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தது. வெளிநாட்டு சந்தைகளில் நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி இருந்தது என்பதை இதிலிருந்து மதிப்பிடலாம்.


இந்திய சந்தையில் இரு சக்கர வாகனங்களுக்கு எப்போதுமே கிராக்கி இருந்து வந்தாலும், அதன் தாக்கம் தற்போது வெளிநாடுகளிலும் காணப்படுகிறது. பல தசாப்தங்களாக, நிறுவனம் பல சிறந்த மாடல்களை ஒன்றன் பின் ஒன்றாக வாடிக்கையாளர்களுக்கு முன்வைத்து வருகிறது.


இந்த காரணத்தினாலேயே மற்ற இருசக்கர வாகன நிறுவனங்களை ஒப்பிடும் போது பிரபலத்திலும் இது அதிகமாக முன்னேறியுள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் தனது முதல் மின்சார வாகனத்தை இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. இது மக்கள் குறித்து ஏற்கனவே உற்சாகமாக உள்ளனர்.


ஆட்டோமொபைல் நிறுவனங்கள் டிசம்பர் 2021க்கான விற்பனை புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளன. நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா அதாவது MSI (Maruti Suzuki India) டிசம்பர் 2021-க்கான விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. 2021 டிசம்பரில் நிறுவனத்தின் விற்பனை நான்கு சதவீதம் குறைந்து 1,53,149 வாகனங்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | BMW iX SUV முதல் எலக்ட்ரிக் காரின் விலை இந்தியாவில் 1.15 கோடி ரூபாய்! விவரம் இங்கே... 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR