புதுடெல்லி: ஆண்ட்ராய்டு 2.3.7 அல்லது அதற்கும் குறைவாக இயங்கும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் நீங்கள் இனி Google செய்யமுடியாது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட்ராய்டு 2.3.7 வெளியிடப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செப்டம்பர் 27 க்குப் பிறகு இந்த  போன்கள் மூலம் உள்நுழைந்தால், Google தயாரிப்புகளைப் பயன்படுத்த முயற்சிக்கும்போது பயனர்பெயர் அல்லது கடவுச்சொல் பிழைகள் வரலாம். அதோடு, ஜிமெயில், யூடியூப் மற்றும் கூகுள் மேப்ஸ் போன்ற சேவைகளும் இயங்காமல் போகலாம்.  


"உங்கள் சாதனம் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பிற்கு (3.0+) மேம்படுத்தும் திறன் இருந்தால், அந்த சாதனத்தில் கூகுள் ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கான அணுகலை பராமரிக்க அவ்வாறு செய்யுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்" என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  


ALSO READ | மிகவும் மலிவான விலையில் 6 ஜிபி ரேம் கொண்ட Xiaomi பட்ஜெட் ஸ்மார்ட்போன்


"எங்கள் பயனர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான எங்கள் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆண்ட்ராய்டு 2.3.7 அல்லது அதற்குக் குறைவான ஆண்ட்ராய்டு சாதனங்களில் செப்டம்பர் 27, 2021 முதல் உள்நுழைவதை Google இனி அனுமதிக்காது" என்று நிறுவனம் மேலும் கூறியுள்ளது.


Android 2.3.7 மற்றும் அதற்குக் கீழே உள்ள Google கணக்கில் உள்நுழைவதற்கான காலக்கெடு முடிவடைந்ததும், பயனர்கள் தங்கள் பழைய சாதனங்கள் மூலம் கூகுள் செய்யும்போது, மின்னஞ்சல் அல்லது காலெண்டரை சேர்க்க முயன்றால் பயனர்பெயர் அல்லது கடவுச்சொல் பிழை என்ற செய்தியையே அதிகம் பெறுவார்கள்.


புதிய Android பதிப்பு (3.0 அல்லது புதியது) மூலம் உங்கள் கணக்கில் உள்நுழைய முடியும். உங்கள் சாதனம் புதிய ஆண்ட்ராய்டு பதிப்பிற்கு (3.0+) மேம்படுத்தும் திறன் இருந்தால், அதை செய்தால் போதும். இல்லையென்றால் புதிய போன் தான் வாங்க வேண்டும்.


உங்கள் சாதனத்தை புதிய ஆண்ட்ராய்டு பதிப்பில் (3.0+) புதுப்பிக்க முடியாவிட்டால், உங்கள் சாதனத்தின் இணைய உலாவியில் (web browser) உங்கள் Google கணக்கில் உள்நுழைய முயற்சி செய்யலாம்.


உங்கள் சாதனத்தின் இணைய உலாவியில் Google இல் உள்நுழையும்போது மேலும் சில Google சேவைகளையும் பயன்படுத்தலாம்.


ALSO READ | ஒரே போனில் இரண்டு Whatsapp கணக்குகளை இயக்குவது எப்படி? விவரம் இதோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR