Best Budget 5G Smartphones In Amazon India: இந்தியாவில் 4ஜி இணைய சேவை என்பது தற்போது ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வரை அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் வழங்குகின்றன. இது மட்டுமின்றி, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 5ஜி இணைய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5ஜி இணைய சேவை என்பது தற்போது இந்தியாவில் அன்லிமிடெட் முறையில் வாடிக்கையாளர்கள் பெறுகின்றனர். அதாவது, நீங்கள் ஜியோ மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்களாக இருக்கும்பட்சத்தில், சாதாரண டேட்டா உடன் கூடிய ரீசார்ஜ் திட்டத்தை வைத்திருக்கும்பட்சத்தில், 5ஜி இணைய சேவையை நீங்கள் வரம்பற்ற வகையில் இலவசமாகவே பெறலாம். 4ஜியின் தினசரி டேட்டா முடிந்தாலும், 5ஜி டேட்டா மூலம் இணையத்தை நீங்கள் பயன்படுத்தலாம். 


குறிப்பாக, 5ஜி டேட்டாவை பயன்படுத்த உங்கள் ஸ்மார்ட்போன் 5ஜி மொபைலாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். 4ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் ஏர்டெல், ஜியோ வழங்கும் இந்த 5ஜி வரம்பற்ற டேட்டா சலுகையை பயன்படுத்த முடியாது. இந்தாண்டின் பாதிக்கு பிறகு, ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இந்த வரம்பற்ற 5ஜி சலுகையை நிறுத்தப் போவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அந்த வகையில், தற்போது 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுவும், குறைவான பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போனை வாடிக்கையாளர்கள் வாங்க முயற்சிக்கிறார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் கிடைக்கும் 5ஜி ஸ்மார்ட்போனை இங்கே காணலாம். 


மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் ஸ்லோவா இருக்கா? சூப்பர் ஃபாஸ்ட் ஆக இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க


OnePlus CE 3 Lite 5G


ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சமீபத்தில் அதிக சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், இந்த மொபைல் தற்போதைய வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த மொபைல் FHD+ ரெஸ்சோல்யூனுடன் 6.7 இன்ச் 120Hz டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 695 5G சிப்செட் மூலம் இயங்குகிறது. 


இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 17ஆயிரத்து 999 ரூபாய் முதல் கிடைக்கிறது. இது பாஸ்டல் லைம் (பால்பச்சை நிறம்) மற்றும் கிரே என இரண்டு வண்ண வகைகளில் வருகிறது. இந்த மொபைலில் 5,000mAh பேட்டரி உள்ளது. இதில், 108MP + 2MP + 2MP என மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. குறிப்பாக, மொபைலின் முன்புறத்தில் 16MP செஃல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 


iQoo Z7s 5G


iQOO நிறுவனத்தின் இந்த மொபைல் FHD+ ரெஸ்சோல்யூனுடன் 6.38-இன்ச் 90Hz AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது Qualcomm Snapdragon 695 5G சிப்செட் மூலம் இயங்குகிறது. 44W ஃப்ளாஷ் சார்ஜர் மூலம் அதிவேகமாக சார்ஜ் ஏறும். 


இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 15 ஆயிரத்து 999 ரூபாயில் கிடைக்கிறது. குறிப்பாக, இது ஒரு நார்வே நீலம் என்ற நிறத்தில் வருகிறது. இதில், 64MP + 2MP என இரு பின்புற கேமரா அமைப்பும், முன்புறத்தில் 16MP செல்ஃபி கேமராவும் உள்ளது.


Samsung Galaxy M34 5G


சாம்சங் நிறுவனத்தின் இந்த மொபைல் FHD+ ரெஸ்சோல்யூனுடன் 6.5 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த மொபைல் மூன்று வண்ண வகைகளில் இந்திய சந்தையில் கிடைக்கிறது. இதில், 6,000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 


இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் 14 ஆயிரத்து 999 ரூபாய் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதில் 50MP + 8MP + 2MP என மூன்று பின்புற கேமரா அமைப்பும், முன்புறத்தில் 13MP செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.


இந்த மூன்று மொபைல்களையும் நீங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விலையில், அதுவும் ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து வாங்க அமேசான் இணையதளத்தை அணுகவும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள மொபைல் மாடல்களை அமேசான் தளத்தில் தேடி கண்டுபிடித்து, இதனை நீங்கள் ஆர்டர் செய்யலாம். 


மேலும் படிக்க | தினசரி ஸ்பேம் கால்கள் அதிகம் வருகிறதா? உடனே இத பண்ணுங்க!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ