Diwali Shopping: ஆன்லைன் ஷாப்பிங்கில் நாட்டம் உள்ளவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு உதவியாக இருக்கும். பண்டிகை காலங்கள் அல்லாத சாதாரண நாட்களிலும் பல ஆன்லைன் விற்பனை தளங்கள் பல வித தள்ளுபடிகளை அளிக்கின்றன. தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் இந்த தள்ளுபடிகள் பற்றி கேட்கவே வேண்டாம். நம்ப முடியாத அளவு சலுகைகளும் தள்ளுபடிகளும் இங்கு வழங்கப்படுகின்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபலமான ஆன்லைன் விற்பனை தளங்களான பிளிபார்ட், அமேசான் போன்ற அன்லைன் தளங்கள் வாடிக்கையாளர்களுக்கு பலவித இன்ப அதிர்ச்சிகளை அளிக்கின்றன. கேஜெட்டுகள், ஆடை அணிகலன்கள், மேக்-அப் ஆக்சஸெரீஸ் என அனைத்து வகை பொருட்களிலும் பெரிய அளவிலான தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த தீபாவளியன்றும் பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் அற்புதமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்குகின்றன. Flipkart, Amazon, Myntra, Nike, Ajio போன்ற தளங்கள் வழங்கும் சலுகைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


பிளிப்கார்ட்:


பிளிப்கார்டில் தீபாவளி விற்பனை தொடங்கி சமீபத்தில்தான் நிறைவடைந்தது. பிளஸ் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 10 நள்ளிரவு முதல் பிளஸ் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு, அக்டோபர் 11 முதல் தீபாவளி விற்பனை தொடங்கியது. அக்டோபர் 16 ஆம் தேதி வரை இந்த விற்பனை நடந்தது. SBI வங்கி அட்டையைப் பயன்படுத்தி ஷாப்பிங் செய்தவர்களுக்கு 10 சதவிகிதம் தள்ளுபடியும், Axis Bank Card, Paytm Wallet மற்றும் UPI மூலம் பரிவர்த்தனை செய்தவர்களுக்கு 10 சதவிகிதம் உடனடி கேஷ்பேக் வழங்கப்பட்டது. மானிட்டர்கள், பிரிண்டர்கள் மற்றும் கேமராக்களுக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி உள்ளது. கணினி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் தொடர்பான பொருட்களுக்கு 80 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கப்பட்டது.


மேலும் படிக்க | குறைந்த விலையில் டேட்டாவை அள்ளி கொடுக்கும் வோடாஃபோன் ஐடியா 


அமேசான்: 


அமேசான் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், தொலைக்காட்சிகள், மருத்துவ பொருட்கள், தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள், குழந்தைகள் தயாரிப்புகள் மற்றும் பலவற்றில் சிறப்புச் சலுகைகளை வழங்கப்படுகின்றன. Tecno, IQ மற்றும் Xiaomi ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடியைக் கொண்டுள்ளன. அமேசானின் தீபாவளி விற்பனை அக்டோபர் 20 தொடங்கி 24 வரை நடைபெறுகிறது.


நைக்: 


ஃபேஷன் பிராண்டான நைக்கின் தீபாவளி விற்பனையும் தொடங்கியுள்ளது. பல்வேறு அழகு சாதனப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கிறது. ரூ.400 பிளாட் தள்ளுபடி மற்றும் ரூ.200 பிளாட் தள்ளுபடி போன்ற பல சலுகைகளும் இதில் வழங்கப்படுகின்றன.


மிந்த்ரா: 


Myntra ஆடைகள், அணிகலன்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் கேஜெட்டுகளுக்கு 50 முதல் 80 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. அலங்கார பொருட்கள் மற்றும் அணிகலன்களுக்கு 40 முதல் 70 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது. ஆக்டிவ்வேர் மற்றும் கிட்ஸ்வேர்களுக்கு Myntra 70 சதவீதம் தள்ளுபடி கிடைக்கிறது.


அஜியோ: 


ஃபேஷன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் மீது அஜியோ சிறந்த சலுகைகளை வழங்குகிறது. பல்வேறு வீட்டுப் பொருட்கள், ஸ்டைலான மேற்கத்திய மற்றும் இந்திய ஆடைகள், அக்சசரிகள் மற்றும் பிரீமியம் பிராண்டுகள் மீது 50 முதல் 90 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. 


மேலும் படிக்க | உங்கள் பேஸ்புக் தகவல் திருடப்பட்டிருக்கிறதா? தெரிந்து கொள்ள ஈஸியான வழி 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ