சந்தையில் வரக்கூடிய புதுப்புது ஸ்மார்ட்போன்களை வாங்குவதில் பலருக்கும் ஆர்வம் மிகுதியாக இருக்கும், அதிலும் பட்ஜெட் விலைக்குள் மொபைல்கள் கிடைத்துவிட்டால் அனைவருக்கும் சந்தோஷமாக இருக்கும். அதிலும் குறைவான விலையில், சிறப்பான பல அம்சங்களுடன் ஸ்மார்ட்போன் கிடைத்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார்கள்.  இந்திய சந்தையில் ரூ.15,000க்கு குறைவான விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு வந்துள்ளது.  இந்த ஸ்மார்ட்போன்கள் விலை குறைவானதாக இருந்தாலும், கேமரா தரம் முதல் நீண்ட கால பேட்டரி ஆயுள் மற்றும் சிறப்பான செயலிகள் வரை அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது.  இப்போது மே மாதத்தில் இந்திய சந்தையில் கிடைக்கக்கூடிய சிறப்பான ஸ்மார்ட்போன்களை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1) சாம்சங் கேலக்சி எம்14 5ஜி:


கேலக்சி எம்13 5ஜி மொபைலின் வாரிசான சாம்சங் கேலக்சி எம் 14 5ஜி மொபைலானது, ரூ.15,000 விலையில் கிடைக்கும் சிறந்த அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போனாக விளங்குகிறது.  சாம்சங் கேலக்சி எம் 14 5ஜி மொபைலானது 90Hz எல்சிடி டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது மற்றும் இது FHD+ தெளிவுத்திறனைக் கொண்டுள்ளது.  கூடுதலாக, இந்த மொபைல் திறமையான Exynos 1330 SoC ஆல் இயக்கப்படுகிறது, இது சாம்சங் பிரத்யேகமாக உருவாக்கிய உள்-சிப் ஆகும்.  மேலும் இந்த பிரிவில் கிடைக்கும் மொபைலில் உள்ள ஒரே 5nm செயலி இதுவாகும்.  கூடுதலாக, கேலக்சி M14 12 5G வோப்பிங் பேண்டுகளை ஆதரிக்கிறது, இதன் மூலம் நீங்கள் எங்கு சென்றாலும் தொடர்ந்து இணைந்திருக்க முடியும்.  இந்த மொபைல் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது ஹெவி தொலைபேசி பயனர்களுக்கு ஒரு பெரிய பிளஸ் ஆகும்.  பேட்டரியின் தன்மையால் உங்கள் மொபைலை நீங்கள் தொடர்ந்து சார்ஜ் செய்யாமல் இருக்கலாம்.  


மேலும் படிக்க | Amazon Bumber sale Discount: ஏசி பாதி விலைக்கு கிடைக்கும்..! சலுகைகள் விவரம் இதோ


2) போக்கோ எம்4 5ஜி:


போக்கோ எம்4 5ஜி மொபைலானது ரூ.15,000க்கு குறைவான விலை வரம்பில் உள்ள மற்றொரு சிறந்த ஸ்மார்ட்போனாகும்.  போக்கோ எம்4 5ஜி ஸ்மார்ட்போனானது, மீடியாடெக் டைமென்சிட்டி 810 SoC இலிருந்து, பிரமிக்க வைக்கும் வடிவமைப்பிற்கு மென்மையான செயல்திறனை வழங்குகிறது.  90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய மொபைலானது சிறந்த ஐபிஎஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருப்பதால் சமூக ஊடகங்களில் ஸ்க்ரோலிங் செய்யும்போதோ அல்லது வீடியோக்களை பார்க்கும்போதோ உங்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.  கூடுதலாக இந்த மொபைல் 5,000mAh பேட்டரி திறனை கொண்டுள்ள இந்த மொபைல் 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.  இதன் மூலம் உங்கள் பேட்டரி நீடித்து உழைக்கும் மற்றும் இதில் 50எம்பி டிரிபிள்-ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளதால் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிறப்பான முறையில் எடுக்க முடியும்.  மலிவு விலையில் சிறந்த 5G மொபைலை விரும்பும் எவருக்கும் இந்த போக்கோ எம்4 ப்ரோ 5ஜி மொபைல் சிறந்த தேர்வாக இருக்கும்.


3) ஐகியூ Z6 லைட் 5ஜி:


ஐகியூ Z6 லைட் 5ஜி மொபைலானது பட்ஜெட் விலையில் சிறப்பான அம்சங்களுடன் வரும் மற்றொரு மொபைலாகும்.  உங்களுக்கு நிதியிழப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் அல்லது பட்ஜெட் விலைக்குள் மொபைலை வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் யோசிக்கவே வேண்டாம், தாராளமாக ஐகியூ Z6 லைட் மொபைலை தேர்வு செய்யலாம்.  ஐகியூ Z6 லைட் மொபைல் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 SoC ஆல் இயக்கப்படுகிறது, இந்தியாவில் இந்த சிப்செட்டைக் கொண்டிருக்கும் முதல் தொலைபேசி இதுவாகும். கூடுதலாக, இது 120Hz எல்சிடி டிஸ்ப்ளே, 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரி மற்றும் 50MP இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது.  ஒட்டுமொத்தமாக, ஐகியூ Z6 லைட் ஆனது இந்தியாவில் ரூ.15,000க்கு குறைவான விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்களுள் ஒன்றாகும்.


4) மோட்டோ ஜி13:


குறைவான விலையில் சிறந்த செயல்திறனையும், கேமரா திறனையும் கொண்ட மொபைலை தேடுபவர்களுக்கு மோட்டோ ஜி13 சிறந்த தேர்வாகும், மோட்டோ ஜி13 ஐ தவிர வேறு எந்த மொபைலும் சிறப்பானதாக அமையாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  இந்த மொபைலின் அடிப்படை வேரியண்டை நீங்கள் வெறும் ரூ. 10,000க்கு கூட வாங்கிக்கொள்ள முடியும்.  ஹீலியோ ஜி85 சிப்செட் மூலம், மோட்டோ ஜி13 அன்றாடப் பணிகளை எளிதாகக் கையாளும் திறன் கொண்டது.  குறைந்த விலையில் இருந்தாலும், இந்த போன் திறமையான கேமராவைக் கொண்டுள்ளது, இதில் எடுக்கப்படும் புகைப்படங்கள் அனைத்தும் சிறந்த முறையில் இருக்கும்.  சிறப்பான செயல்திறன் மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய பேட்டரி ஆயுளை இந்த மொபைல் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | Flipkart Big Saving Days Sale 2023: ஸ்மார்ட்போன்களுக்கு இவ்வளவு கம்மி விலையா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ