பாரதி ஏர்டெல் நிறுவனம் ஒரு புதிய ஆப்பருடன் களத்தில் இறங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக ஆன்லைனில் ஸ்மார்ட்போன் விற்பனை செய்ய பாரதி ஏர்டெல் நிறுவனம் துவங்கியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் தற்போது ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஐபோன் 7 விற்பனை ஜோராக நடைபெறுகிறது. அதன்படி ஐபோன் 7 (32 ஜிபி) வாங்குவோர் முன்பணமாக ரூ.7,777 மட்டும் தெலுத்தலாம். மீதித்தொகையை மாதம் ரூ.2,499 என்ற தவணை முறையில் செலுத்தலாம். ஐபோனிற்கு வாடிக்கையாளர்கள் செலுத்தும் தவணையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் 30 ஜிபி டேட்டா ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏர்டெல் தளத்தில் ஐபோன் 7 முன்பதிவு செய்ததும், ஐபோன் வாடிக்கையாளர்களின் வீட்டிலேயே விநியோகம் செய்யப்படும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.