எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிரடி ஆஃபர்களை பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் அள்ளி வீசி வருகின்றன. பிளிப்கார்ட் ஏற்கனவே ஆஃபர்களை அறிவித்துள்ள நிலையில் அமேசான் நிறுவனமும் ஆஃபர்களை அள்ளி வீசி வருகிறது. ஜூன் 7 ஆம் தேதி தொடங்கிய இந்த ஆஃபர் விற்பனையில் களைகட்டிக் கொண்டிருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஸ்மார்ட்போன்களுக்கு பெரும் தள்ளுபடிகளை அறிவித்துள்ள அமேசான், மற்ற எலக்டிரானிக்ஸ் பொருட்களுக்கும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஸ்மார்ட் டிவி வாங்கும் ஆசை உங்களுக்கு இருந்தால் இந்த வாய்ப்பை தவறவிட்டுவிடாதீர்கள். 


சாம்சங் ஸ்மார்ட்டிவி தள்ளுபடி 


சாம்சங் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் அறிமுக விலை ரூ.22,900. ஆனால் அமேசானில் ரூ.15,990-க்கு கிடைக்கிறது. இந்த தள்ளுபடி விலை மட்டுமல்லாமல் பல வங்கி மற்றும் பரிமாற்ற சலுகைகளும் உள்ளன. இதனை நீங்கள் முறையாக பயன்படுத்தினால் டிவியின் விலை கணிசமாகக் குறையும்.


மேலும் படிக்க | Amazon Sale:  ரூ.99-க்கு ரூ.12,000 ஆயிரம் மதிப்புள்ள Redmi 5G ஸ்மார்ட்போன் 


சாம்சங் ஸ்மார்ட் டிவி வங்கி சலுகை


சாம்சங் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க, சிட்டி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டைப் பயன்படுத்த வேண்டும். அப்போது, உங்களுக்கு ரூ.1500 தள்ளுபடி கிடைக்கும். அப்படி கிடைத்தால் டிவியின் விலை ரூ.14,490 ஆக இருக்கும். அதன் பிறகு எக்ஸ்சேஞ்ச் சலுகையும் உண்டு.


ஸ்மார்ட் டிவி எக்ஸ்சேஞ்ச் சலுகை


சாம்சங் 32 இன்ச் ஸ்மார்ட் டிவியில் ரூ.4,110 எக்ஸ்சேஞ்ச் சலுகை உள்ளது. நீங்கள் பழைய டிவியை மாற்றிக் கொண்டால், உங்களுக்கு  இந்த பணம் சலுகையாக கிடைக்கும். ஆனால் பழைய டிவி நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே உங்களுக்கு தள்ளுபடி கிடைக்கும். முழு தள்ளுபடியும் கிடைத்தால் 10,380 ரூபாய்க்கு தொலைக்காட்சியை நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். 


மேலும் படிக்க | Motorola Moto G60: 3,499 ரூபாய்க்கு மோட்டோரோலா ஸ்மார்ட்போன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR