சீனாவை மையமாக கொண்டு இயங்கும் டி.சி.எல் கம்யூனிகேஷன் பிளாக்பெர்ரி "மோஷன்" என்னும் புது மொபைல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த மொபைல் ஆனது 4,000 mAh பேட்டரி திறன் கொண்டதுடன், பிரபலமான பிளாக்பெர்ரி "கீ-ஒன்" -னில் இருப்பது போன்ற விசைப்பலகை வடிவத்தினை கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஸ்மார்ட்போன் 5.5 அங்குல முழு HD எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 625 சிப்செட் இணைப்புடனும், 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்புடன் திறனுடனும் வெளிவருகிறது. மேலும் IP67 நீர் எதிர்ப்பு திறன் மற்றும் ஆண்ட்ராய்ட் 7.1 இயக்க முறைமை (OS) இல் இயங்கவுள்ளது. 


மேலும் ஒரு சிறப்பம்சமாக f/2.0 அப்பார்ட்சர் மற்றும் 8MP முன் கேமரா, 12MP பின்புற கேமரா வசதி அடங்கியுள்ளது. 


"ஜிட்டெக்ஸ் தொழில்நுட்ப வாரத்தில்" இந்த மொபைல் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


பிளாக்பெர்ரி "மோஷன்" தற்போது சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (ஐக்கிய அரபு அமீரகம்) நாடுகளில் சுமார் $460-க்கு கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது!