BLDC Fan: மின்சாரத்தை அபரிமிதமாக சேமிக்கும் சூப்பர் ஃபேன்! மின்விசிறியில் இத்தனை விஷயங்களா?
Best Fans For Air Cirulation : கரண்ட் பில்லே இல்லாம ஏசி மாதிரி ஃபேன் காத்து வேணுமா? வந்தாச்சு BLDC மின்விசிறிகள்! மின்சாரத்தை சேமிக்க அருமையான வழி...
Best Fans: எப்போதும் ஃபேன் ஓடிக் கொண்டிருந்தாலும், மின்சார செலவு குறைவாக இருக்க வேண்டுமானால், என்ன செய்யலாம் என்று யோசிப்பவரா நீங்கள்? மின்சாரத்தை சேமிக்க நல்ல வழி BLDC ஃபேன் தான். இந்த ஃபேன்கள், பிரஷ்லெஸ் DC விசிறிகள் ( brushless Direct current) ஆகும். பிரஷ்லெஸ் டைரக்ட் கரண்ட் (BLDC) மோட்டாரைப் பயன்படுத்தும் சீலிங் ஃபேன்கள் அவற்றின் ஆற்றல் சேமிப்பு, சத்தமில்லாத செயல்பாடு மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகியவற்றின் காரணமாக பிரபலமான மின்சார விசிறிகளாக மாறிவிட்டன.
BLDC மின்விசிறி
பிரஷ் இல்லாத DC மின்விசிறி என்பது பிரஷ் இல்லாத நேரடி மின்னோட்டம் (BLDC) மோட்டாரைப் பயன்படுத்தும் ஃபேன் ஆகும். இது வீட்டின் கூரைத் தளத்தில் இருந்து தொங்கும் ஃபேன் ஆகும். வழக்கமான பாரம்பரிய ஃபேன்களைவிட, பல நன்மைகளை கொண்டுள்ள மின்விசிறிகளைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
BLDC ஃபேனின் நன்மைகள்
குறைந்த சப்தம்: இந்த விசிறிகள் மற்ற மின்விசிறிகளை விட மிகக் குறைவான சத்தத்தையே உருவாக்குகின்றன, எனவே சத்தம் இல்லாமல் அருமையான காற்றை அனுபவிக்கலாம்.
மின்சார பயன்பாடு: இந்த மின்விசிறிகள், பாரம்பரிய மின்விசிறிகளை விட குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன, இது இதனால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன் மின் கட்டணமும் குறையும்.
காற்று ஓட்டம் அதிகரிப்பு: இந்த விசிறிகள் அறை முழுவதும் சீரான காற்று ஓட்டத்தை வழங்குகின்றன, இது நல்ல காற்றோட்டத்தை அளிக்கிறது.
சுத்தம் செய்வது எளிது: சுத்தம் செய்வது மிகவும் எளிதான ஃபேன்கள் இவை.
பொருத்துவது எளிமையானது: பிரஷ் இல்லாத DC மின்விசிறிகளை நிறுவுவதும் எளிதானது.
கவர்ச்சிகரமான வடிவமைப்பு: பிரஷ் இல்லாத DC மின்விசிறிகள், நவீனமானவை என்பதுடன் கவர்ச்சிகரமான வடிவமைப்பு கொண்டவை. வழக்கமான மின்விசிறிகளுடன் ஒப்பிடும்போது, இவை பார்ப்பதற்கு அழகாக இருக்கும்
BSDC மின்விசிறிகள் வயதானவர்களுக்கு மிகவும் நல்லது, ஏனெனில் மிகக் குறைந்த சத்தம் ஏற்படுத்துவ்துடன் அவற்றின் காற்று சீராக பரவுகிறது. அதனால் ஏற்கனவே தூக்கமின்மையால் அவதிப்படும் வயதானவர்களுக்கு ஏற்றவை இந்த ஃபேன்கள்.
மருத்துவமனைகள் மற்றும் ஹோட்டல்கள் என பொதுவிடங்களில் குளிர்ச்சியான மற்றும் வசதியான சூழலை உருவாக்க இந்த மின்விசிறிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.
மிகக் குறைந்த சத்தம் இருப்பதால், அலுவலகங்களில் பிரஷ் இல்லாத DC மின்விசிறிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ