SIM கார்டு இல்லாமலேயே பேசலாம்... அதிரடி காட்டும் BSNL... பதற்றத்தில் ஏர்டெல், ஜியோ
D2D தொழில்நுட்ப உதவியுடன், சிம் கார்டு அல்லது கூடுதல் நெட்வொர்க் இல்லாமல் பயனர்கள் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS தவிர பல ஸ்மார்ட் சாதனங்களிலும் D2D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
சிம் கார்டு இல்லாமலேயே எவருக்கும் கால் செய்து பேசக்கூடிய ஸ்மார்ட்போன் கற்பனையாக தோன்றினாலும் விரைவில் அது நிஜமாகப் போகிறது. சிம் கார்டு இல்லாமலேயே எவருடனும் போனில் பேசக்கூடிய தொழில்நுட்பத்தை விரைவில் மக்கள் பெறப் போகிறார்கள். இந்த தொழில்நுட்பத்தின் பெயர் Direct to Device (D2D).
D2D தொழில்நுட்ப சோதனையை நிறைவு செய்த பிஎஸ்என்எல்
D2D அழைப்பை அரசு நிறுவனமான BSNL தொடங்கு திட்டமிட்டுள்ள நிலையில், D2D அழைப்பின் சோதனையையும் நிறைவு செய்துள்ளது. D2D அழைப்பு வசதிக்காக உலகளாவிய செயற்கைக்கோள் தொடர்பு நிறுவனமான Viasat உடன் BSNL கூட்டு சேர்ந்துள்ளது. D2D அழைப்பின் கீழ், சிம் கார்டு அல்லது கூடுதல் நெட்வொர்க் இல்லாமல் பயனர்கள் ஆடியோ மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஆண்ட்ராய்டு மற்றும் iOS தவிர, ஸ்மார்ட்வாட்ச்களையும் உள்ளடக்கிய பல ஸ்மார்ட் சாதனங்களிலும் D2D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் கூட D2D தொழில்நுட்பம் வேலை செய்யும் என்பது சிறந்த அம்சம்.
Direct-to-Device இணைப்பு என்றால் என்ன?
Viasat-ன் Direct-to-Device இணைப்பு என்பது ஒரு புரட்சிகரமான தொழில்நுட்பமாகும். இது மொபைல் போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் கார்களை நேரடியாக செயற்கைக்கோள் நெட்வொர்க்குகளுடன் இணைக்க உதவுகிறது. இந்த தொழில்நுட்பம் தனிப்பட்ட மற்றும் சாதன தகவல்தொடர்புக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது, எந்த இடத்திலிருந்தும் நம்பகமான இணைப்பை வழங்குகிறது, குறிப்பாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில்.
மொபைல் டவர் அல்லது கம்பி இணைப்பு தேவையில்லை
செயற்கைக்கோள் தகவல்தொடர்பு அடிப்படையிலான இணைப்பு என்பதால், மொபைல் டவர்கள் அல்லது கம்பி இணைப்புகள் இல்லாமல் சாதனங்களை நேரடியாக இணைக்க அனுமதிக்கிறது. செயற்கைக்கோள் தொலைபேசிகளைப் போலவே, இந்த புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள் மற்றும் பிற ஸ்மார்ட் கேஜெட்டுகளுக்கு இடையே தொடர்பு கொள்ள உதவுகிறது.
மேலும் படிக்க | ஆப்பிள் ஐபோன் முதல் சாம்சங் வரை... அமேசானின் நீடிக்கும் சலுகை விற்பனை...
BSNL மற்றும் Viasat நடத்திய பரிசோதனை
சோதனையின் போது, BSNL மற்றும் Viasat ஆகியவை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில், நிலப்பரப்பு அல்லாத நெட்வொர்க் (NTN) இணைப்பைப் பயன்படுத்தி இருவழிச் செய்தி மற்றும் SOS செய்தி அனுப்புதலை வெற்றிகரமாகச் சோதித்தன. இதில், 36,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயற்கைக்கோள் மூலம் தொலைபேசி அழைப்பும் மேற்கொள்ளப்பட்டது. டெல்லியில் நடந்து வரும் 8வது இந்திய மொபைல் காங்கிரஸ் கூட்டத்தில் (IMC 2024) D2D தொழில்நுட்ப சோதனை மேற்கொள்ளப்பட்டது.
BSNL இன் இந்த வசதியை குறிப்பாக அவசரகால அல்லது ஏதேனும் இயற்கை பேரிடரின் போது பயன்படுத்தலாம். D2D தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், அவசர உதவியை நாடலாம் மற்றும் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்கு இது உதவும்.
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களும் போட்டியில் உள்ளன
பிஎஸ்என்எல் தவிர, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன்-ஐடியா நிறுவனங்களும் செயற்கைக்கோள் இணைப்பு சேவையில் பணியாற்றி வருகின்றன. அதே நேரத்தில், எலான் மஸ்க்கின் நிறுவனமான ஸ்டார்லிங்க் மற்றும் அமேசான் ஆகியவையும் இந்தியாவில் செயற்கைக்கோள் சேவையை வழங்க விண்ணப்பித்துள்ளன. தற்போது இந்த இரண்டு நிறுவனங்களும் இன்னும் தொலைத்தொடர்பு துறையிடம் அதாவது DoT யிடம் இருந்து அனுமதி பெறவில்லை.
மேலும் படிக்க | ஸ்மார்ட்போன் எப்போதும் ஹேங் ஆகாமல்... வேகமாக வேலை செய்ய... சில டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ