ரிலையன்ஸ் ஜியோ தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் டெலிகாம் வாடிகையாளர்களை தன் கட்டுபாட்டில் வைத்துள்ள நிலையில் அதனை தகர்க்கும் முயற்சியில் பிஎஸ்என்எல் புதிய சலுகையை அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதன்படி ரூ.74-க்கு அதிரடி சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. இந்த சலுகை மூலம் 7 நாட்கள் வேலிடிட்டியுடன் தினமும் 1 ஜிபி மொபைல் டேட்டா மற்றும் நாடு முழுவதும் இலவச வாய்ஸ் கால்களை வழங்குகிறது. ஆகஸ்ட் 3 முதல் 12 வரை மட்டுமே இந்த சலுகையை செல்லுபடி ஆகும் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.


முன்னதாக, ‘நியூ வசந்தம்’, ‘பிஎஸ்என்எல் சிக்ஸர்’, ‘666’ போன்ற பல சலுகைகளை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.