பி.எஸ்.என்.எல் திட்டங்கள்: நாட்டின் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனங்களிடையே பி.எஸ்.என்.எல் நிறுவனம் மக்களின் இதயங்களில் ஆளுமை செய்கிறது. இந்த நிறுவனம் மலிவான திட்டத்தில் நிறைய நன்மைகளை வழங்குகிறது நீங்கள் பி.எஸ்.என்.எல் பயனர்களாக இருந்தால், சில முக்கியமான விஷயங்களை கவனித்துக் கொண்டால், உங்களுக்கான மலிவான திட்டத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டில் செயல்படும் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் புதிய புதிய திட்டங்களைக் கொண்டு வருகின்றன என்றாலும், தற்போது பி.எஸ்.என்.எல் பல அதிரடியான சலுகை கொண்ட திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. பி.எஸ்.என்.எல் இன் ப்ரீபெய்ட் திட்டத்தில், நீங்கள் ஒவ்வொரு நாளும் பல பம்பர் நன்மைகளைப் பெறுகிறீர்கள். இதன் காரணமாக பயனர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.


பி.எஸ்.என்.எல் நிறுவனம் வழங்கும் இந்த மலிவான திட்டத்தில் இருந்து நீங்கள் வெளியேற்றினால், வருத்தப்பட வேண்டும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ .400 க்கும் குறைவாக உள்ளது. அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தற்போது பயனர்களின் இதயங்களை வெல்ல ரூ .397 விலையில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 6 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதாவது 180 நாட்கள். திட்டத்தில், ஒரு நாளைக்கு 2 ஜிபி தரவு வழங்கப்படுகிறது. 


மேலும் படிக்க: BSNL அசத்தல் பிளான்: அன்லிமிடெட் கால்ஸ், அன்லிமிடெட் டேட்டா... குஷியில் கஸ்டமர்ஸ்


உங்கள் திட்டத்தின் தினசரி தரவு வரம்பு முடிந்த பிறகு, இணைய வேகம் 40 kbps ஆக இருக்கும். அதாவது ஒரு நாளுக்கு கிடைக்கும் டேட்டா முடிந்த பிறகும், நீங்கள் இன்டர்நெட் வசதியை அனுபவிக்க முடியும். அதாவது ஒரு நாளைக்கு சுமார் 2 ரூபாய் செலவழித்தால் போதும், 6 மாதங்களுக்கு தினசரி 2 ஜிபி  டேட்டாவை பெறலாம். 


இந்த திட்டத்தில் பயனர்களுக்கு ஒரு நாளைக்கு எஸ்எம்எஸ் 100 எஸ்எம்எஸ் வசதிகளும் வழங்கப்படுகின்றன. மலிவான விலையில் நீண்ட செல்லுபடியாகும் நாட்கள் கிடைக்கும். ஒரு நல்ல திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால். உங்கள் ஸ்மார்ட்போனில் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம் நீங்கள் மலிவான திட்டத்தை பெறலாம். 


மேலும் படிக்க: 100 ரூபாய்க்கும் குறைவான ரீசார்ஜ் பிளான், அள்ளித்தரும் BSNL


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ