பி.எஸ்.என்.எல் அதன் ப்ரீபெய்டு பயனர்களுக்கு பல நீண்ட கால திட்டங்களை வழங்குகிறது. நீங்கள் பி.எஸ்.என்.எல் பயனராக இருந்தால், நிறுவனத்தின் நீண்ட கால திட்டங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். இந்நிறுவனம் மற்ற தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களை விட மிக குறைந்த விலையில் நீண்ட கால திட்டங்களை வழங்குகிறது. இந்தத் திட்டங்களில், பயனர்கள் தினசரி டேட்டா, இலவச அழைப்பு மற்றும் பல நன்மைகளைப் பெறகாம். அதன்படி நீண்ட வேலிடிட்டி திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், பி.எஸ்.என்.எல் இன் மலிவு திட்டத்தை முயற்சிக்கலாம். இந்தத் திட்டத்தின் விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1498 ரூபாய் திட்டம்
பி.எஸ்.என்.எல் இன் இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இந்த திட்டத்தில், பயனர்கள் தினசரி 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். அதாவது, பயனர்கள் முழு திட்டத்திலும் மொத்தம் 730 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். தரவு வரம்பு முடிந்த பிறகு, பயனர்கள் தொடர்ந்து 40கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டாவைப் பெறுவார்கள். இது நிறுவனத்தின் மிக விலையுயர்ந்த டேட்டா ரீசார்ஜ் திட்டமாகும். 


மேலும் படிக்க | Excitel வழங்கும் பிரமாண்டமான திட்டங்கள்; தினறும் Jio-Airtel-BSNL 


மேலும் பல திட்டங்களும் கிடைக்கின்றன
நீண்ட காலத்திற்கு அல்ல, குறுகிய காலத்திற்கு தினசரி 2ஜிபி டேட்டாவை நீங்கள் விரும்பினால், நிறுவனம் அத்தகைய திட்டங்களையும் வழங்குகிறது. பி.எஸ்.என்.எல் எஸ்டிவி_198 இல், வாடிக்கையாளர்கள் 50 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவைப் பெறலாம். இதனுடன், பயனர்கள் திட்டத்தில் லோக்தூனின் இலவச சந்தாவையும் பெற முடியும். 


ரூ.151 திட்டத்தில் இருந்து ஹோம் டேட்டா திட்டத்தில் பயனர்கள் 40ஜிபி பெறுகிறார்கள். இதனுடன், பயனர்கள் ஜிங்கிற்கான இலவச சந்தாவையும் 28 நாட்கள் வேலிடிட்டியும் பெறுவார்கள். நிறுவனம் ரூ.251 திட்டத்தையும் வழங்குகிறது, இதில் 70ஜிபி டேட்டா 28 நாட்கள் செல்லுபடியாகும். அதே நேரத்தில், பயனர்கள் ரூ.447 டேட்டா வவுச்சரில் 100ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இதனுடன், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ், பிஎஸ்என்எல் டியூன் மற்றும் ஈரோஸ் நவ் சந்தா ஆகியவற்றை 60 நாட்களுக்குப் பெறுகிறார்கள்.


மேலும் படிக்க | BSNL: ஜியோ, ஏர்டெல்லை அதிர வைக்கும் திட்டம், ரூ. 200-க்கு கீழ் எக்கச்சக்க பலன்கள் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR