அரசுக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) அதிக செல்லுபடியாகும் ப்ரீபெய்ட் திட்டங்களை அவ்வப்போது வழங்கி வருகிறது. அதன்படி BSNL இன் என்ட்ரி-லெவல் ப்ரீபெய்ட் திட்டம் ரூ.107 விலையில் 84 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 3GB தினசரி டேட்டாவுடன் 100 நிமிட இலவச காலிங் வசதிகளுடன் 60 நாட்கள் இலவச BSNL ட்யூன்களுடன் வருகிறது. BSNL 249 ப்ரீபெய்ட் திட்டம் 60 நாட்கள் என்கிற கணக்கில் தினசரி 2GB வழங்குகிறது. இருப்பினும், இந்த பிளான் முதல் ரீசார்ஜ் கூப்பன் (FRC) மற்றும் புதிய பயனர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 SMS உடன் 2GB டேட்டாவை வழங்குகிறது. தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, வேகம் 40 கேபிபிஎஸ் ஆக குறைகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிஎஸ்என்எல் ரூ 247 திட்டம்: BSNL ரூ.247 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடட் காலிங் (Unlimited Calling) மற்றும் 50ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது, அதன் பிறகு இதன் ஸ்பீட் 80Kbps ஆக குறையும். இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ரிங்டோன்களுக்கான அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 30 நாட்கள் செல்லுபடியாகும். 


ALSO READ | Prepaid Recharge Plan: 130க்குள் அசத்தலான ரீசார்ஜ் பிளான் அறிமுகம்; என்ன சலுகைகள்


BSNL 56 நாட்கள் செல்லுபடியாகும் 298 ரூபாய்க்கான சிறப்பு கட்டண வவுச்சரைக் கொண்டுள்ளது மற்றும் அன்லிமிடட் காலிங், 1GB தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது. அதேபோல் பிஎஸ்என்எல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தையும் கொண்டுள்ளது, இதில் 75 நாட்களுக்கு அன்லிமிடட் காலிங் வழங்குகிறது. BSNL வழங்கும் ரூ.395 வவுச்சர் 71 நாட்கள் செல்லுபடியாகும், 3000 நிமிட இலவச ஆன்-நெட் காலிங், இலவச 1800 நிமிட ஆஃப்-நெட் காலிங் மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது.


பிஎஸ்என்எல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்: BSNL இன் மிகவும் பிரபலமான ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்று ரூ.397 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும், இது 300 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் 2ஜிபி தினசரி டேட்டாவுடன் அன்லிமிடட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. தினசரி தரவு தீர்ந்த பிறகு, இதன் ஸ்பீட் 80 Kbps ஆக குறைக்கப்படுகிறது. 


அதேபோல் BSNL ரூ.399 விலையில் 1ஜிபி தினசரி டேட்டாவை 80 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களுடன் வழங்குகிறது. டெல்கோவின் அடுத்த ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றி பேசுகையில், ரூ. 485 விலையில், இந்த திட்டம் 1.5 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை 90 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இது அன்லிமிடட் காலிங் வசதியையும் வழங்குகிறது.


ALSO READ: இந்த திட்டத்தில் ஜியோ-ஏர்டெல் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளிய வோடஃபோன் ஐடியா 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR